நாகப்பட்டினம்

சுகாதாரப் பணிகள் ஆய்வு

தினமணி

திட்டச்சேரி, இந்திரா நகரில் நடைபெற்று வரும் சுகாதாரப் பணிகளை சுகாதாரத் துறை அலுவலர்கள் சனிக்கிழமை ஆய்வு செய்தனர்.

சுகாதாரத் துறை அலுவலர்களின் அறிவுரையின்படி, திட்டச்சேரி பேரூராட்சிக்குள்பட்ட பகுதிகளில் குப்பைகள் மற்றும் கழிவுகள் அகற்றும் பணி நடைபெற்றன. அத்துடன் நீர் தேங்கும் பகுதிகள் சுத்தம் செய்யப்பட்டு மருந்துகள் தெளிக்கப்பட்டன.

இந்தப் பணிகளை மாவட்ட கொள்ளை நோய் தடுப்பு வல்லுநர் லியாகத் அலி, வட்டார சுகாதார மேற்பார்வையாளர் சரசுராமன் சுகாதார ஆய்வாளர் பரமநாதன் ஆகியோர் ஆய்வு செய்தனர். மேலும் அப்பகுதிகளில் பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்கப்படுகிறதா எனவும் ஆய்வு செய்தனர்.

இதேபோல் பூதங்குடி, பாக்கம் கோட்டூர், வடகரை, அம்பல், ஏனங்குடி உள்ளிட்ட பகுதிகளிலும் சுகாதாரப் பணிகளை ஆய்வுசெய்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மே தின விழா: கொடியேற்றம், பேரணி, பொதுக்கூட்டம்

பட்டாசு உற்பத்தியாளா்கள் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடிக்க அறிவுறுத்தல்

யோகமான நாள் இன்று!

தொடா் மின்வெட்டு: மக்கள் சாலை மறியல்

இன்று நல்ல நாள்!

SCROLL FOR NEXT