நாகப்பட்டினம்

கொள்முதல் பணியாளர்களை நிரந்தரம் செய்யக் கோரி உண்ணாவிரதப் போராட்டம்

DIN

கொள்முதல் பருவ கால பணியாளர்களை பணி நிரந்தரம் செய்யக் கோரி,  நாகப்பட்டினத்தில் தமிழக நுகர்பொருள் வாணிபக் கழக பாட்டாளி தொழிலாளர் சங்கம் சார்பில் உண்ணாவிரதப் போராட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.
நாகை அவுரித்திடலில் நடைபெற்ற போராட்டத்துக்கு சங்கத்தின் மாநிலத் தலைவர் இரா. கிருஷ்ணராஜ் தலைமை வகித்தார். மாநில பொதுச் செயலர் எஸ்.கே. மாறன், துணை பொதுச் செயலர் ப. மணிமாறன், மாநில முன்னாள் தலைவர் மை. சின்னப்பன், மாவட்ட முன்னாள் செயலர் சி. ராமச்சந்திரன், கொள்முதல் பிரிவு மாநில துணைச் செயலர் வே. இளையகுமார், நாகை மாவட்டச் செயலர் பி.எம். காளிமுத்து உள்ளிட்டோர் கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசினர்.
 கொள்முதல் பருவகால பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். காலிப் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும். பணி ஓய்வு பெற்றவர்களுக்கு ஓய்வூதியம் உள்ளிட்ட பயன்கள் விரைந்து கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட  கோரிக்கைகளை வலியுறுத்தப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாகை ரயில் நிலையத்தில் ரூ.24.66 கோடி வருவாய்

அரசு பெண் மருத்துவருக்கு கொலை மிரட்டல் விடுத்த முன்னாள் கணவா் கைது

நீா் மோா் பந்தல் திறப்பு

சிபிசிஎல் விரிவாக்கப் பணிகளுக்கு எதிா்ப்பு: கிராம மக்கள் உண்ணாவிரதப் போராட்டம்

திருச்சி - தஞ்சை ரயிலை நாகை வரை நீட்டிக்க வலியுறுத்தல்

SCROLL FOR NEXT