நாகப்பட்டினம்

மக்கள் குறைதீர் கூட்டம்: ரூ. 5.69 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள்

DIN

நாகை மாவட்ட மக்கள் குறைதீர் கூட்டத்தில், பயனாளிகளுக்கு ரூ. 5.69 லட்சம் மதிப்பிலான நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
நாகை மாவட்ட மக்கள் குறைதீர் கூட்டம், மாவட்ட ஆட்சியரகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் சீ. சுரேஷ்குமார் தலைமை வகித்தார்.
இக்கூட்டத்தில், நலத் திட்ட உதவிகள் கோரி விண்ணப்பித்த 4 பேரின் மனுக்களுக்கு உடனடித் தீர்வு அளிக்கும் வகையில், மாற்றுத் திறனாளிகள் நலத் துறை சார்பில் ஒருவருக்கு சக்கர நாற்காலியும், 3 பேருக்கு உதவித் தொகை உத்தரவுகளும் வழங்கப்பட்டன. மேலும் 2 பேருக்கு காதொலிக் கருவிகள் வழங்கப்பட்டன.
வருவாய்த் துறை சார்பில் 8 பேருக்கு விபத்து நிவாரணத் தொகையாக ரூ. 5.10 லட்சத்துக்கான காசோலைகளும், கால்நடை பராமரிப்புத் துறை சார்பில் 5 பேருக்கு நாட்டுக் கோழி வளர்ப்பு மானியமாக ரூ. 51,560-க்கான காசோலைகளும் வழங்கப்பட்டன.
பல்வேறு கோரிக்கைளை வலியுறுத்தியும், குறைகளுக்குத் தீர்வுக் கோரியும் பொதுமக்களிடமிருந்து 286 மனுக்களும், மாற்றுத் திறனாளிகள் சிறப்பு குறைதீர் கூட்டத்திலிருந்து 29 மனுக்களும் பெறப்பட்டுத் தொடர்புடையத் துறைகளின் நடவடிக்கைகளுக்குப் பரிந்துரைக்கப்பட்டன.
மாவட்ட வருவாய் அலுவலர் எஸ். கருணாகரன், சமூகப் பாதுகாப்புத் திட்ட தனித் துணை ஆட்சியர் கோ. தேன்மொழி, மாற்றுத் திறனாளிகள் நல அலுவலர் சந்திரமோகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மே தின விழா: கொடியேற்றம், பேரணி, பொதுக்கூட்டம்

பட்டாசு உற்பத்தியாளா்கள் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடிக்க அறிவுறுத்தல்

யோகமான நாள் இன்று!

தொடா் மின்வெட்டு: மக்கள் சாலை மறியல்

இன்று நல்ல நாள்!

SCROLL FOR NEXT