நாகப்பட்டினம்

வேதாரண்யத்தில் பழுதடைந்த பள்ளிக் கட்டடங்கள் அகற்றம்

DIN

நாகை மாவட்டம்,வேதாரண்யம் ஊராட்சி ஒன்றியத்தில் பழுதடைந்த நிலையில் காணப்படும் பள்ளி வகுப்பறை கட்டடங்களை இடித்து அகற்றும் பணி நடைபெற்று வருகிறது.
வேதாரண்யம் ஊராட்சி ஒன்றியத்தில் பல்வேறு பயன்பாடுகளுக்காக கட்டப்பட்டு பழுதடைந்துள்ள கட்டடங்களை பருவ மழையைக் கருத்தில் கொண்டு அகற்ற மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.
இதையடுத்து, பல்வேறு கட்டடங்கள் இடிக்கப்பட்டு வருகிறது. இந்த பகுதியில் செயல்படும் பள்ளிகளில் 12 கட்டடங்கள் பழுதடைந்துள்ளதாக மதிப்பீடு செய்யப்பட்டுள்ளன.
இவற்றில்,வேதாரண்யம் மூன்றாம் தெரு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியின் நுழைவுவாயில் பகுதியில் உள்ள கட்டடம் இடித்து அகற்றும் பணி தொடங்கியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தங்கம் விலை ஒரு சவரன் ரூ.54,160-க்கு விற்பனை!

உலகக் கோப்பை வில்வித்தை: 3 தங்கப் பதக்கங்களை வென்ற இந்திய அணிகள்!

கேஜரிவால் கைதைக் கண்டித்து தில்லியில் ஆம் ஆத்மியினர் ஆர்ப்பாட்டம்!

மோடி விரைவில் மேடையிலேயே கண்ணீர் விடும் நிலை வரக்கூடும்: ராகுல் காந்தி

கவினின் ‘ஸ்டார்’ பட டிரைலர்!

SCROLL FOR NEXT