நாகப்பட்டினம்

சீர்காழியில் மீண்டும் மழை

DIN

சீர்காழியில் செவ்வாய்கிழமை மீண்டும் மிதமானஅளவில் மழை பெய்தது.
வடகிழக்குப் பருவமழை, சீர்காழியில் கனமழையாக பெய்தது. இதனால் சம்பா வயல்கள், குடியிருப்புகளில் வெள்ளநீர் சூழ்ந்து பாதிப்பை ஏற்படுத்தியது. கடந்த சில நாள்களாக மழை சற்று ஓய்ந்ததால் தேங்கிய மழை நீர் மெல்ல வடிந்து வருகிறது. இந்நிலையில், செவ்வாய்கிழமை கருமேகங்கள் சூழ்ந்து குளிர்ந்த காற்று வீசிக்கொண்டிருந்தது. பிறகு மாலை 4.10 முதல் 4.45 வரை மிதமான மழை பெய்தது. பள்ளி விடும் நேரத்தில் பெய்த இந்த திடீர் மழையை எதிர்பார்க்காத மாணவ, மாணவியர்   மழையில் நனைந்தவாறு வீடு திரும்பினர். இதேபோல், குடியிருப்புகளைச் சூழ்ந்த மழைநீர், தற்போது வடிந்து வரும் நிலையில் மீண்டும் மழை பெய்யத் தொடங்கியதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.
இதேபோல், சம்பா சாகுபடி வயல்களில் தண்ணீர் தேங்கியுள்ள நிலையில் மீண்டும் மழை பெய்வது விவசாயிகளிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது. கொள்ளிடம், திருவெண்காடு பகுதியிலும் லேசான மழை பெய்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

லாரி மீது கார் மோதி விபத்து: 5 பேர் பலி

முதல்வர் ஸ்டாலின் மே நாள் வாழ்த்து!

சென்னை உயர் நீதிமன்றத்துக்கு கோடை விடுமுறை!

நாகை மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் கொடூர தாக்குதல்!

நாளை குருப்பெயா்ச்சி: ஆலங்குடியில் சிறப்பு ஏற்பாடுகள்

SCROLL FOR NEXT