நாகப்பட்டினம்

நாற்றங்கால்  முறை இறால் வளர்ப்பு கருத்தரங்கம்

DIN

நாகூர் அருகேயுள்ள வாஞ்சூரில் இறால் வளர்ப்பில் நாற்றங்கால் முறை எனும் கருத்தரங்கம் வியாழக்கிழமை நடைபெற்றது.
 வாஞ்சூரில் உள்ள தனியார் மீன் வளர்ப்பு பண்ணையில் நடைபெற்ற கருத்தரங்குக்கு சிபி அக்குவாகல்ட்சர் நிறுவனத்தின் துணைத் தலைவர் வி.ஆர். மான்சிங் தலைமை வகித்தார். இதில் தமிழ்நாடு மீன்வளப் பல்கலைக்கழக இயக்குநர் எம். நாகூர் மீரான் பங்கேற்று பேசினார்.
சிபி நிறுவனத்தின் துணைத் தலைவர்  அம்நார்ட் லாங்டேட்,  மீன் பண்ணையின் மனித வள மேம்பாட்டு அலுவலர் ஆர். ரவிக்குமார்,  பொது மேலாளர் ஆர். ராஜ்மோகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். மேலும் நாகை மாவட்டத்திலிருந்து ஏராளமான இறால் உற்பத்தியாளர்கள் இந்த கருத்தரங்கில் கலந்துகொண்டனர்.  
இதில் நாற்றங்கால் முறையில் இறால் வளர்த்து, பின்னர் குளத்தில் விடுவதால் விளையும் நன்மைகள், இறால் வளர்ப்பை லாபகரமாக நடத்தும் வழிமுறைகள் உள்ளிட்டவை குறித்து கருத்தரங்கில் விவாதிக்கப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அரசு பெண் மருத்துவருக்கு கொலை மிரட்டல் விடுத்த முன்னாள் கணவா் கைது

நீா் மோா் பந்தல் திறப்பு

சிபிசிஎல் விரிவாக்கப் பணிகளுக்கு எதிா்ப்பு: கிராம மக்கள் உண்ணாவிரதப் போராட்டம்

திருச்சி - தஞ்சை ரயிலை நாகை வரை நீட்டிக்க வலியுறுத்தல்

சாலையில் கண்டெடுத்த நகை உரியவரிடம் ஒப்படைப்பு

SCROLL FOR NEXT