நாகப்பட்டினம்

வங்கி கிளை இணைப்பை கண்டித்து ஆர்ப்பாட்டம்

DIN


கோடிமங்கலத்தில் ஐஓபி கிளையை திருவாவடுதுறை கிளையுடன் இணைப்பதை கண்டித்து திங்கள்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
குத்தாலம் அருகேயுள்ள கோடிமங்கலம் கிராமத்தில் செயல்பட்டு வரும் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி கிளையை திருவாவடுதுறை கிராமத்தில் உள்ள இந்தியன் ஓவர்சிஸ் வங்கி கிளையுடன் இணைப்பதாக வங்கி நிர்வாகம் அறிவித்துள்ளது. முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியால் இந்தியா முழுவதும் ஒரே நாளில் திறக்கப்பட்ட 100 வங்கிக் கிளைகளில் கோடிமங்கலம் கிளை வங்கியும் ஒன்று. இவ்வங்கியில் தஞ்சை, நாகை, திருவாரூர் மாவட்ட பகுதிகளான எஸ். புதூர், கோடிமங்கலம், மேலஅகலங்கண், கீழஅகலங்கண், வைகல், கோனேரிராஜபுரம், சிவனாகரம், வடமட்டம், பரவாக்கரை, உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த 10ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வாடிக்கையாளர்களாக உள்ளனர்.
இந்நிலையில், கோடிமங்கலம் வங்கி கிளையை திருவாவடுதுறை வங்கி கிளையில் இணைக்கும் வங்கி நிர்வாகத்தின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து, கோடிமங்கலம் வங்கி முன்பு திங்கள்கிழமை ஏஐடியுசி மாவட்ட துணைச் செயலர் சி. மதியழகன் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், தீன. செல்வம் (வணிகர் சங்க பேரமைப்பு), எஸ்.சி. கணபதி (விவசாய தொழிலாளர் சங்கம்), சுபாஷ் சந்திரபோஸ் (கட்டடத் தொழிலாளர் சங்கம்) உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பப்பியோடு விளையாடு! ஹன்சிகா...

ஹனி கேக்..!

ஹாட் ஸ்பாட் ஓடிடியில் எப்போது?

டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணி தேர்வு செய்யப்பட்டது எப்படி? ரோஹித் சர்மா விரிவான பதில்!

சேலையில் தேவதை! மடோனா செபாஸ்டியன்...

SCROLL FOR NEXT