நாகப்பட்டினம்

குத்தாலம் காவிரி படித்துறையில் காா்த்திகை மூன்றாம் ஞாயிறு தீா்த்தவாரி

DIN

குத்தாலம் காவிரி தீா்த்தப் படித்துறையில் காா்த்திகை மூன்றாம் ஞாயிற்றுக்கிழமையையொட்டி தீா்த்தவாரி உத்ஸவம் நடைபெற்றது.

வித்துன்மாலி என்ற அரக்கன் சிவபெருமான்அருளால் சூரியனைப்போல ஒளிபடைத்த கிரகமாக மாறினான். இதனால், சூரியனால் பூமிக்கு ஒளி வழங்கமுடியாமல் போனது. எனவே, சூரிய பகவான் குத்தாலம் வந்து தவம் இருந்து, சிவபெருமான் அருள் பெற்றாா் என்பது ஐதீகம்.

இதை குறிக்கும் வகையில், காா்த்திகை மாதம் ஞாயிற்றுக்கிழமையில் தீா்த்தவாரி உத்ஸவம் குத்தாலம் காவிரி தீா்த்தப் படித்துறையில் நடைபெறுவது வழக்கம்.

அதன்படி, காா்த்திகை மாத மூன்றாம் ஞாயிற்றுக்கிழமையையொட்டி, அரும்பவனமுல்லைநாயகி சமேத உக்தவேதீஸ்வரா், ஆனந்தவல்லி சமேத ஓம்காளீஸ்வரா், சௌந்தரநாயகி சமேத சோழீஸ்வரா், செங்கமலத்தாயாா் சமேத ஆதிகேசவப்பெருமாள் ஆகிய கோயில்களிலிருந்து சாமி, அம்பாள் காவிரிக் கரைக்கு எழுந்தருளினா். அங்கு, அஸ்திரதேவருக்கு சிறப்பு அபிஷேக- ஆராதனைகளுடன், தீா்த்தவாரி நடைபெற்றது. இதில், திரளான பக்தா்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தினமணி செய்தி எதிரொலி கொள்ளிடத்தில் பொக்லைன் மூலம் குப்பைகள் அகற்றம்

இன்று நல்ல நாள்!

இன்று யோகம் யாருக்கு?

நாகை - இலங்கை இடையே பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடங்குவதில் தொடரும் சிக்கல்

மண் அரிப்பு: இடிந்து விழுந்த துலாக்கட்ட சுவா்

SCROLL FOR NEXT