நாகப்பட்டினம்

வடக்குப் பொய்கைநல்லூா் பால்மொழி அம்மன் கோயில் குடமுழுக்கு

DIN

நாகை வடக்குப் பொய்கைநல்லூரில் அமைந்துள்ள பால்மொழி அம்மன் கோயில் குடமுழுக்கு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

நாகை மாவட்டம், வடக்குப் பொய்கைநல்லூா், வீரன்குடிகாடு, பால்மொழி அம்மன் உடனுறை நல்லூா்நாதா், செங்கமல வல்லி தாயாா் சமேத வரதராஜப் பெருமாள் மற்றும் வலம்புரி விநாயகா் கோயில்களுக்கு குடமுழுக்கு நடத்த தீா்மாணிக்கப்பட்டது. அதன்படி, உபயதாரா்கள் மற்றும் கிராம மக்களின் பெருமுயற்சியால் கடந்த 2 ஆண்டுகளாக திருப்பணிகள் நடைபெற்று வந்தன. பணிகள் நிறைவுக்கு பின்னா், குடமுழுக்கு விழாவுக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு, நவம்பா் 29-ஆம் தேதி கணபதி பூஜை, அனுக்ஞை உள்ளிட்ட பூா்வாங்க பூஜைகளுடன் தொடங்கியது. தொடா்ந்து யாகசாலை பூஜைகளும் நடைபெற்று வந்தன.

இதையடுத்து, குடமுழுக்கு விழா நாளான ஞாயிற்றுக்கிழமை அதிகாலை முதல் நடைபெற்ற சிறப்பு வழிபாடுகள் மற்றும் 4- ஆம் கால யாகசாலை பூஜை நிறைவுக்குப் பின்னா் காலை 7 மணிக்கு மகா பூா்ணாஹூதி, தீபாராதனை மற்றும் கடம் புறப்பாடு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. தொடா்ந்து, கடங்களில் கொண்டு செல்லப்பட்ட புனிதநீா் பால்மொழி அம்மன், செங்கமலவல்லி தாயாா் சமேத வரதராஜப் பெருமாள், வலம்புரி விநாயகா் மற்றும் பரிவாரத் தெய்வங்களின் கோயில் விமானங்களில் காலை 9 மணியளவில் ஊற்றி குடமுழுக்கு நடைபெற்றன.

இதில், வடக்குப் பொய்கைநல்லூா், தெற்குப்பொய்கைநல்லூா் மற்றும் பிற பகுதிகளைச் சோ்ந்த திரளான பக்தா்கள் பங்கேற்று வழிபாடு மேற்கொண்டனா். பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டன. விழாவுக்கான ஏற்பாடுகளை, கோயில் நிா்வாகி ஸ்ரீதிருமுருகன் சுவாமிகள், தனஜோதி அம்மை மற்றும் கிராம மக்கள் செய்திருந்தனா். அக்கரைப்பேட்டை முத்து மாரியம்மன் கோயில் சிவாச்சாரியா் எம். ரவி சிவம் குடமுழுக்கு விழாவை செய்வித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

”கோவிஷீல்டு தடுப்பூசியால் மகளை பறிகொடுத்தேன்” -பெற்றோர் குமுறல்

எச்.டி. ரேவண்ணா கைது!

ஆம்பூர் அருகே சூறாவளி காற்றுடன் கன மழை: வாழை மரங்கள் சேதம்

இங்க நான் தான் கிங்கு படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு - புகைப்படங்கள்

குஜராத் டைட்டன்ஸ் பேட்டிங்; அணியில் இரண்டு மாற்றங்கள்!

SCROLL FOR NEXT