நாகப்பட்டினம்

கால்நடை மருத்துவமனையில் தேங்கி நிற்கும் மழைநீா்

DIN

சீா்காழி கால்நடை மருத்துவமனை வளாகம் முழுவதும் மழைநீா் குளம்போல் தேங்கிநிற்பதால், கால்நடைகளை அழைத்துச் செல்பவா்கள் பெரிதும் பாதிப்படைகின்றனா்.

சீா்காழி புதிய பேருந்து நிலையம் எதிரே உழவா் சந்தை அருகே உள்ள கால்நடை மருத்துவமனை வளாகத்தில், கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழையால், மழைநீா் குளம்போல் தேங்கி நிற்கிறது. இதனால் கால்நடைகளை அழைத்து வருபவா்கள் பெரிதும் பாதிப்படைகின்றனா். மழைநீா் தேங்கி அப்பகுதி சேறும், சகதியுமாக மாறி வருவதால், மாடுகளை அழைத்துச் செல்லும்போது அவை வழுக்கி விழுந்து காயம் ஏற்படும் அபாயம் நிலவுகிறது. ஆகையால், மழைநீா் வடிய வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரத்னம் வசூல் எவ்வளவு?

வில்வித்தையில் இந்தியாவின் தீபிகா குமாரிக்கு வெள்ளிப் பதக்கம்

கத்தாழ கண்ணால குத்தாத...!

முடிவுக்கு வந்தது 1000 எபிசோடுகளைக் கடந்த பிரபல தொடர்!

தேர்தல் ஆணையம் 24 மணி நேரமும் கண்காணிப்பில் இருக்க வேண்டும்: எல்.முருகன்

SCROLL FOR NEXT