நாகப்பட்டினம்

அறிவியல் ஆசிரியர்களுக்கான பணியிடைப் பயிற்சி நிறைவு

DIN

மயிலாடுதுறை அருகே மன்னம்பந்தல் ஏவிசி கல்லூரியில், நாகை மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவிபெறும் நடுநிலைப்பள்ளியில் பணியாற்றி வரும் அறிவியல் ஆசிரியர்களுக்கான 5 நாள் பணியிடைப் பயிற்சி விழா வெள்ளிக்கிழமை நிறைவுபெற்றது.
தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மன்றத்தின் நிதியுதவியுடன் நடைபெற்ற இந்த முகாமில், சுமார் 45 பள்ளிகளைச் சேர்ந்த 50 அறிவியல் ஆசிரியர்கள் கலந்துகொண்டு கணிதம், கணினி அறிவியல், இயற்பியல், வேதியியல், உயிரியல் ஆகிய பாடங்களில் செய்முறையோடு கூடிய பயிற்சி பெற்றனர்.
நிறைவு நாள் விழாவுக்கு ஏவிசி கல்லூரியின் செயலர் கே. கார்த்திகேயன் தலைமை வகித்து, அறிவியல் ஆசிரியர்களுக்கான பயிற்சிக் கையேட்டை வெளியிட்டார். இதில், கல்லூரி முதல்வர் ஆர். நாகராஜன், டீன் எஸ். மயில்வாகணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 
ஏற்பாடுகளை பேராசிரியர்கள் டி.எம். சதீஷ்கண்ணன், கே. அமிர்தகணேசன் ஆகியோர் செய்திருந்தனர்.
கல்லூரி அறிவியல் மன்றத் துணைத் தலைவர் பேராசிரியர் எஸ். ராஜசேகர் வரவேற்றார். பேராசிரியர் பி. அன்பு சீனிவாசன் நன்றி கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உப்பு சத்தியாகிரக தண்டி யாத்திரை நினைவுக் குழுவினருக்கு வரவேற்பு

இன்று உங்களுக்கு நல்ல நாள்!

3 ஆண்டில் 31 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளது: அமைச்சா் டி.ஆா்.பி. ராஜா

யோகம் யாருக்கு? தினப் பலன்கள்!

தென்பரை ஆவணியப்பன் கோயிலில் குதிரை எடுப்பு திருவிழா

SCROLL FOR NEXT