காவலர்களுக்கு சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வு முகாம்
நாகை ஆயுதப்படை காவல் அதிகாரிகள் மற்றும் காவல் ஆளிநர்களுக்கான சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வு முகாம்
நாகை ஆயுதப்படை காவல் அதிகாரிகள் மற்றும் காவல் ஆளிநர்களுக்கான சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வு முகாம் மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
முகாமில், 200-க்கும் மேற்பட்ட காவலர்கள் பங்கேற்றனர். இதில், தலைக்கவசம், சீட்பெல்ட் அணிந்து வாகனம் ஓட்டுவது மற்றும் சாலைப் பாதுகாப்பின் அவசியம் குறித்து அறிவுரைகள் வழங்கப்பட்டன. காவல் ஆய்வாளர்கள் சந்திரமோகன், பரந்தாமன் மற்றும் ஆயுதப்படை அதிகாரிகள் மற்றும் காவல் ஆளிநர்கள் கலந்துகொண்டனர். துணை காவல் கண்காணிப்பாளர் திருவேங்கடம் காவலர்களுக்கு சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வு குறித்து பேசினார்.