நாகப்பட்டினம்

பசுமைப்படை பொறுப்பாசிரியர்களுக்கான கருத்தரங்கம்

DIN

பள்ளிக் கல்வித்துறைக்கு உள்பட்ட நாகை கல்வி மாவட்ட தேசிய பசுமைப்படை பொறுப்பாசிரியர்களுக்கான ஒரு நாள் கருத்தரங்கம் நாகை இ.ஜி.எஸ். பிள்ளை பொறியியல் கல்லூரியில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
முதன்மைக் கல்வி அலுவலர் க. குணசேகரன் தலைமை வகித்து, தேசிய பசுமைப்படை நடவடிக்கைகளில் சிறப்பாக செயல்பட்ட ஆசிரியர்களுக்குப் பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கினார்.
சமூக ஆர்வலர்கள் ராஜா சரவணன், பண்டரிநாதன், தேசிய மாணவர் படை முன்னாள் கமாண்டர் ராஜேந்திரன், நாளை இயக்க நிர்வாகி செகுரா ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாகக் கலந்து கொண்டனர்.
இந்தக் கருத்தரங்கத்தில் நீர்வள மேலாண்மை பணிகள் குறித்து  விளக்கம் அளிக்கப்பட்டது. தேசிய பசுமைப்படையின் மயிலாடுதுறை மற்றும் சீர்காழி கல்வி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் செல்வகுமார் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார். 
தேசிய பசுமைப்படையின் நாகை கல்வி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் முத்தமிழ் ஆனந்தன் வரவேற்றார். உதவி ஒருங்கிணைப்பாளர் செங்குட்டுவன் நன்றி கூறினார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

4-ஆவது கட்ட மக்களவைத் தோ்தலில் 1,717 போ் போட்டி

உள்ளூா் வாகனங்களுக்கு இ-பாஸ் தேவையில்லை

நாகை அரசு தலைமை மருத்துவமனை சிகிச்சைப் பிரிவுகள் மாற்றம்: சிபிஎம் ஆா்ப்பாட்டம்

மணிப்பூா் இனக் கலவரம்: ஓராண்டாகியும் நீடிக்கும் பிளவு!

கட்கபுரீஸ்வரா் கோயில் கும்பாபிஷேகம்

SCROLL FOR NEXT