நாகப்பட்டினம்

நிறைவாழ்வு பயிற்சி பெற்ற காவலர்களுக்கு சான்றிதழ்

நிறைவாழ்வு பயிற்சி பெற்ற காவலர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.  

DIN

நிறைவாழ்வு பயிற்சி பெற்ற காவலர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.  
நாகை மாவட்டக் காவல் நிலையங்களில் பணிபுரியும் காவலர்கள் பணிச்சுமையால் ஏற்படும் மனஅழுத்தத்துக்கு தீர்வு காணும் வகையில் அவர்களுக்கும்,  அவர்களது குடும்பத்தினர்களுக்கும் நிறைவாழ்வு பயிற்சி முகாம் நாகை ஆயுதப்படை மைதானத்தில் ஜூலை 26,28 ஆகிய 2 நாள்கள் நடைபெற்றன. தேசிய மனநல மற்றும் நரம்பியல் அறிவியல் நிறுவன மண்டல துணை இயக்குநர் தியாகராஜன், வேதாரண்யம் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் வெர்ஜினியா ஆகியோர் பயிற்சியளித்தனர். இப்பயிற்சியில் பங்கேற்ற 35 காவலர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர்களுக்கு மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் டி.கே. ராஜசேகரன் சான்றிதழ்களை வழங்கினார். நிகழ்ச்சியில் காவல்துறை அதிகாரிகள் மற்றும் காவலர்கள் கலந்து
கொண்டனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஹிஜாப்பை விலக்கிய விவகாரம்! நிதீஷ் குமாருக்கு எதிராக காவல்துறையில் புகார்!

பிரதமர் மோடிக்கு எத்தியோப்பியாவின் மிக உயரிய விருது!

ஜாஃப்ராபாதில் 2 சகோதரா்கள் சுட்டுக் கொலை

மார்கழி சிறப்பு! திருப்பதியில் சுப்ரபாதம் இசைக்கப்படாது!

கன்னி ராசிக்கு வெற்றி : தினப்பலன்கள்!

SCROLL FOR NEXT