நாகப்பட்டினம்

தொகுதி வளர்ச்சி நிதி ஒதுக்கீடு பெற்றதும் அடிப்படை வசதிகள் செய்து தரப்படும்: எம்.பி. ராமலிங்கம்

DIN


மக்களவைத் தொகுதி வளர்ச்சி நிதி பெற்றவுடன் அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்படும் என்று மயிலாடுதுறை திமுக எம்.பி. ராமலிங்கம் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்து கூறினார். 
நாகை மாவட்டம், கொள்ளிடம் கிழக்கு ஒன்றியத்தில் ஆர்ப்பாக்கம், பச்சைபெருமாள் நல்லூர், திருமுல்லைவாசல் உள்ளிட்ட 19 ஊராட்சிகளில் 80-க்கும் மேற்பட்ட கிராமங்களில் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்து மேலும் அவர் பேசியது: 
மக்களவை உறுப்பினராக பதவியேற்ற பிறகு, தொகுதிக்கான வளர்ச்சி நிதி ஒதுக்கீடு செய்யப்படும். அந்த நிதி வந்ததும் சட்டப்படியான அங்கீகாரம் பெற்று தொகுதி மக்களுக்கு அடிப்படை வசதிகளான சாலை, குடிநீர் உள்ளிட்டவை செய்து கொடுக்கப்படும் என்றார் அவர்.
அவருடன், திமுக மாவட்ட பொறுப்பாளர் நிவேதா எம். முருகன், சட்டப் பேரவை முன்னாள் உறுப்பினர் பன்னீர்செல்வம், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலர் 
சீனிவாசன் உள்ளிட்டோர் உடனிருந்தனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிரஜ்வல் ரேவண்ணா பாலியல் வழக்கு: பாதிக்கப்பட்ட பெண்கள் புகாரளிக்க உதவி எண் வெளியீடு!

பொறியியல் கலந்தாய்வு: முதல்நாளில் 20 ஆயிரத்திற்கும் அதிகமானோர் விண்ணப்பம்!

முதலைகள் சுற்றித் திரியும் ஆற்றில் மகனை வீசிய தாய் கைது!

ஷஷாங் சிங்குக்கு பரிசளித்த எம்.எஸ்.தோனி!

உங்களுக்குப் பிடித்த படம் எது? கேட்பது யாஷிகா ஆனந்த்...

SCROLL FOR NEXT