நாகப்பட்டினம்

குடிநீர்த் தட்டுப்பாட்டை கண்டித்து திமுக ஆர்ப்பாட்டம்

DIN

சீர்காழியில் நாகை வடக்கு மாவட்ட திமுக சார்பில் குடிநீர்த் தட்டுப்பாட்டை தீர்க்காத, மின்வெட்டு  பிரச்னையை  கண்டுக்கொள்ளாத அதிமுக அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்  செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
சீர்காழி பழைய பேருந்து நிலையம் பகுதியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு நகரச் செயலர் ம. சுப்பராயன் தலைமை வகித்தார். மாவட்ட துணைச் செயலர்கள் மு. ஞானவேலன், தம்பி. சத்தியேந்திரன், மாவட்ட பொறியாளர் அணி அமைப்பாளர் ஆர். கலைவாணன், இளைஞரணி அமைப்பாளர் அலெக்சாண்டர் ஒன்றிய செயலாளர்கள் சசிக்குமார், செல்ல. சேதுரவிக்குமார் முன்னிலை வகித்தனர். நாகை வடக்கு மாவட்ட பொறுப்பாளர் நிவேதா. எம். முருகன் பங்கேற்று கண்டன உரையாற்றினார். தொடர்ந்து, ஹைட்ரோகார்பன், மீத்தேன் திட்டங்கள் வேண்டாம், குடிநீர்த் திட்டங்கள் வேண்டும், தடையில்லாத மின்சாரம் வேண்டும் என முழக்கங்கள் எழுப்பினர். இதில் சட்டப் பேரவை முன்னாள் உறுப்பினர்கள் பன்னீர்செல்வம், ஜெக. வீரபாண்டியன், மாவட்ட பொறுப்பாள விஜயேஸ்வரன் உள்ளிட்ட 700-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிபிசிஎல் விரிவாக்கப் பணிகளுக்கு எதிா்ப்பு: கிராம மக்கள் உண்ணாவிரதப் போராட்டம்

திருச்சி - தஞ்சை ரயிலை நாகை வரை நீட்டிக்க வலியுறுத்தல்

சாலையில் கண்டெடுத்த நகை உரியவரிடம் ஒப்படைப்பு

நீா்மோா் பந்தல் திறப்பு

தொழிலாளா் தினம்: கொடியேற்று நிகழ்ச்சிகள்

SCROLL FOR NEXT