நாகப்பட்டினம்

ஹைட்ரோ கார்பன் திட்டம்: 5- ஆவது நாளாக காத்திருப்புப் போராட்டம்

DIN

வேதாரண்யத்தை அடுத்த கரியாப்பட்டினத்தில் ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி, சுற்றுப்பகுதி கிராம மக்கள் 5-ஆவது நாளாக வியாழக்கிழமையும் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கரியாப்பட்டினம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் முன்பு நடைபெற்ற இப்போராட்டத்துக்கு கரியாப்பட்டினம் ஹைட்ரோ கார்பன் திட்ட எதிர்ப்புப்  போராட்டக் குழு ஒருங்கிணைப்பாளர் த. சரவணமுத்து தலைமை வகித்தார். கரியாப்பட்டினம் போராட்டக் குழு நிர்வாகிகள் ஏ. நடராசன், ரவிச்சந்திரன், கோவிந்தராசு, பாலு, கருணாநிதி, கிருஷ்ணன் மற்றும் பெண்கள்,சிறுவர்கள் என நூற்றுக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். இதில் எழுத்தாளர் தமிழ்ச்செல்வி, திமுக மாவட்டப் பொறுப்பாளர் கௌதமன், முத்தரையர் சிங்கப் பேரவை நற்பணி மன்ற நிறுவனர் எஸ்.எம். வெற்றிச்செல்வன் மற்றும் பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா அமைப்பைச் சேர்ந்தவர்கள் பங்கேற்று போராட்டக் கோரிக்கைக்கு ஆதரவு தெரிவித்துப் பேசினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பொறியியல் கலந்தாய்வு: முதல்நாளில் 20 ஆயிரத்திற்கும் அதிகமானோர் விண்ணப்பம்!

முதலைகள் சுற்றித் திரியும் ஆற்றில் மகனை வீசிய தாய் கைது!

ஷஷாங் சிங்குக்கு பரிசளித்த எம்.எஸ்.தோனி!

உங்களுக்குப் பிடித்த படம் எது? கேட்பது யாஷிகா ஆனந்த்...

உதகை, கொடைக்கானல் செல்வோர் கவனத்திற்கு: நள்ளிரவு முதல் இ-பாஸ் கட்டாயம்

SCROLL FOR NEXT