நாகப்பட்டினம்

தேசிய ஒருமைப்பாட்டு விழா: நாட்டின் கலாசாரத்தைப் பறைசாற்றிய மாணவர்கள்

DIN


செம்பனார்கோவில் அருகே உள்ள திருவிளையாட்டம் கலைமகள் மெட்ரிக். பள்ளியில், தேசிய ஒருமைப்பாட்டு விழா வெள்ளிக்கிழமை கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது.
நாட்டில் உள்ள அனைத்து மாநிலங்களின் மொழி, கலாசாரம், உணவு, உடை, பாரம்பரிய கலைகள், மாநிலப் பறவை, விலங்கு ஆகியவற்றைக் காட்சிகளாகவும், அந்தந்த மாநில உடைகளை அணிந்துவந்தும், உணவுகளை தயாரித்து வந்தும் மாணவர்கள் கொண்டாடினர். மேலும், ஒவ்வொரு மாநிலத்துக்கும் ஓர் அரங்கு அமைத்து, கலை நிகழ்ச்சிகளையும் மாணவர்கள் நடத்திக் காட்டினர். 
அந்த வகையில், 300-க்கும் மேற்பட்ட படைப்புகள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன. 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பார்வையிட்டு ரசித்துச் சென்றனர். ஆசிரியர்கள், பெற்றோர்கள், மாணவர்களின் கூட்டு முயற்சியில் நடந்த இவ்விழாவை செம்பனார்கோவில் கலைமகள் மெட்ரிக். மேல்நிலைப்பள்ளியின் முதல்வர் மகாலெட்சுமி தொடங்கி வைத்தார். தலைமையாசிரியை கமலி மற்றும் ஆசிரியைகள், அலுவலக ஊழியர்கள் கலந்துகொண்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பதோனி அதிரடியால் தப்பித்த லக்னௌ அணி 165 ரன்கள் சேர்ப்பு!

‘கேக் காதலன்’ பாட் கம்மின்ஸ் பிறந்தநாள்!

மலையாள இயக்குநர் சங்கீத் சிவன் காலமானார்

தொடரும் ஏர் இந்தியா- விமான பணியாளர்கள் பிரச்னை: பயணிகளுக்குத் தீர்வு என்ன?

மீண்டும் பிரபுதேவா - தனுஷ் கூட்டணி!

SCROLL FOR NEXT