நாகப்பட்டினம்

புனித சிந்தாத்திரை மாதா திருத்தல ஆண்டு பெருவிழா

DIN

சீர்காழி அருகேயுள்ள எருக்கூர் புனித சிந்தாத்திரை மாதா திருத்தல ஆண்டு பெருவிழா புதன்கிழமை நடைபெற்றது. 
விழா கடந்த ஏப்ரல் 30-ஆம் தேதி மாலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து நவநாள் சிந்தனை நிகழ்ச்சியின் தொடர்ச்சியாக முதல்நாள் மலை நாட்டிற்கு பயண நிகழ்ச்சியும் பெத்லகேமிற்கு பயணம், எகிப்திற்கு பயணம் உள்ளிட்ட பயண நிகழ்ச்சி நடைபெற்றது. தொடர்ந்து 9-ஆம் நாளான புதன்கிழமை மாலை திருச்சிலுவைப் பணி மற்றும் திருவிழா திருப்பலி இரவு முழுவதும் தேர் பவனியும், 10-ஆம் நாள் வியாழக்கிழமை நன்றி திருப்பலி நிகழ்ச்சியும் நடைபெற்றது. விழாவில், பட்டவிளாகம், பெரம்பூர், மாதிரவேளுர், கீழமாத்தூர், புத்தூர், கொள்ளிடம், அரசூர், ஆச்சாள்புரம், காட்டூர், கொப்பியம், கற்பள்ளம் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட பங்கு இறை மக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஸ்வாதி மாலிவால் கூறியது போல் எதுவும் நடக்கவில்லை: தில்லி அமைச்சர் அதிஷி விளக்கம்

பிரான்ஸில் சோபிதா துலிபாலா..

சிஏஏ என்பது வெறும் கண்துடைப்பு: மம்தா பானர்ஜி!

மிஸ்டர் அண்ட் மிஸஸ் மஹி பாடல் வெளியீட்டு விழா - புகைப்படங்கள்

100 யூனிட் இலவச மின்சாரம் ரத்தா? மின் வாரியம் விளக்கம்

SCROLL FOR NEXT