நாகப்பட்டினம்

துணை சுகாதார நிலையம் அமைக்க ஆய்வு

DIN

சீர்காழி அருகேயுள்ள சட்டநாதபுரத்தில் துணை சுகாதார நிலையம் அமைக்க மாவட்ட வருவாய் அலுவலர் அண்மையில் இடம் ஆய்வு செய்தார். 
சட்டநாதபுரம் ஊராட்சி கேவிஎஸ். நகரில் பொதுமக்கள் பயன்பாட்டுக்காக 24 மணி நேரமும்  செயல்படும் செவிலியரை  கொண்டு இயங்கக்கூடிய துணை சுகாதாரநிலையம் அமையவுள்ளது. இதற்கான இடத்தை நாகை மாவட்ட  வருவாய் அலுவலர் இந்துமதி தலைமையிலான குழுவினர் ஆய்வு செய்தபோது, அப்பகுதி மக்கள் இப்பகுதியில் ஏற்கெனவே குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி, சேவை மைய கட்டடம் இருப்பதால் மாற்று இடத்தில் துணை சுகாதார நிலையம் அமைக்க வலியுறுத்தினர். ஆய்வின்போது, மயிலாடுதுறை கோட்ட அலுவலர் கண்மணி, சீர்காழி வட்டாசியர் சபிதாதேவி, மண்டல துணை வட்டாசியர் பாபு, நில அளவை பிரிவு துணை ஆய்வாளர் செல்வம், வருவாய் ஆய்வாளர் ராஜேஷ் ஆகியோர் உடனிருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உப்பு சத்தியாகிரக தண்டி யாத்திரை நினைவுக் குழுவினருக்கு வரவேற்பு

இன்று உங்களுக்கு நல்ல நாள்!

3 ஆண்டில் 31 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளது: அமைச்சா் டி.ஆா்.பி. ராஜா

யோகம் யாருக்கு? தினப் பலன்கள்!

தென்பரை ஆவணியப்பன் கோயிலில் குதிரை எடுப்பு திருவிழா

SCROLL FOR NEXT