நாகப்பட்டினம்

சந்தன மாரியம்மன் கோயில் குடமுழுக்கு: திரளானோர் பங்கேற்பு

DIN

நாகை, காடம்பாடியில் உள்ள சந்தன மாரியம்மன் கோயில் குடமுழுக்கு விழா வெள்ளிக்கிழமை சிறப்பாக நடைபெற்றது.
நாகை காடம்பாடியில் உள்ள சந்தனமாரியம்மன் கோயில் மற்றும் இக்கோயிலின் பெரியநாயகி அம்மன், காத்தவராயசுவாமி உள்ளிட்ட பரிவாரத் தெய்வங்களுக்கு குடமுழுக்கு மேற்கொள்ள திட்டமிட்டு, திருப்பணிகள் நடைபெற்றன. 
திருப்பணிகளின் நிறைவில், கோயிலின் மகா குடமுழுக்கு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதையொட்டி, யாகசாலை பூஜைகள் வியாழக்கிழமை இரவு தொடங்கின.
வெள்ளிக்கிழமை காலை இரண்டாம் கால யாக பூஜையின் நிறைவில், கடம் புறப்பாடு நடைபெற்றது. காலை சுமார் 10 மணிக்கு விமான குடமுழுக்கும், 10.30 மணிக்கு மூலவர் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கான மகா குடமுழுக்கும் நடைபெற்றன. 
இந்த நிகழ்ச்சிகளில் நாகை மற்றும் சுற்றுப் பகுதிகளைச் சேர்ந்த திரளான பக்தர்கள் பங்கேற்று வழிபாடு மேற்கொண்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இளம்பருவத்தினர் இணையவழி குற்றங்களில் ஈடுபடாமல் தடுக்க சர்வதேச ஒத்துழைப்பு தேவை -தலைமை நீதிபதி

'ஜெயக்குமார் தனசிங் காலமான செய்தி கேட்டு மிகுந்த அதிர்ச்சியும், துயரமும் அடைந்தேன்'

அரண்மனை - 4 முதல்நாள் வசூல்!

‘டாக்ஸிக்’ படத்தில் கரீனாவுக்கு பதிலாக நயன்தாரா?

ஐபிஎல் தொடரில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்தி மும்பை வீரர் சாதனை!

SCROLL FOR NEXT