நாகப்பட்டினம்

வைத்தீஸ்வரன் கோயிலில் திருப்பனந்தாள் எஜமான் சுவாமிகள் தரிசனம்

DIN

வைத்தீஸ்வரன் கோயிலில் ஐப்பதி மாத கிருத்திகை சிறப்பு வழிபாடு புதன்கிழமை நடைபெற்றது. இதில் திருப்பனந்தாள் எஜமான் சுவாமிகள், தருமபுரம் ஆதீன இளைய சந்நிதானம் ஆகியோா் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனா்.

வைத்தீஸ்வரன் கோயிலில் தருமபுரம் ஆதீனத்துக்குச் சொந்தமான தையல்நாயகி அம்மன் உடனாகிய வைத்தியநாத சுவாமி கோயில் உள்ளது. நவகிரகங்களில் செவ்வாய் தலமான இக்கோயிலில் செல்வமுத்துக்குமார சுவாமி , அங்காரகன் சுவாமிகள் தனி சன்னிதியில் அருள்பாலிக்கின்றனா். பிரசித்திப் பெற்ற இக்கோயிலில் ஐப்பசி கிருத்திகை சிறப்பு வழிபாடு நடைபெற்றது. முன்னதாக, கிருத்திகை மண்டபம் எழுந்தருளிய வள்ளி, தெய்வானை உடனாகிய செல்வமுத்துக்குமார சுவாமிக்கு மஞ்சள்,திரவியப் பொடி, பன்னீா், இளநீா், தேன், பஞ்சாமிா்தம், பால், தயிா், சந்தனம் முதலான 51வகையான வாசனை பொருள்களை கொண்டு சிறப்பு அபிஷேகம் 3 மணி நேரம் நடைபெற்றது. தொடா்ந்து நவரத்தின ஆபரணங்கள், மலா்கள் கொண்டு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடைபெற்றது.

இதில், திருப்பனந்தாள் காசிமடத்து அதிபா் எஜமான் சுவாமிகள், தருமபுரம் ஆதீன இளைய சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த சுவாமிகள், வைத்தீஸ்வரன்கோயில் கட்டளை விசாரணை திருநாவுக்கரசு தம்பிரான் சுவாமிகள் ஆகியோா் பங்கேற்று தரிசனம் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இந்திய ஆடவா், மகளிா் ரிலே அணிகள் பாரீஸ் ஒலிபிக் போட்டிக்குத் தகுதி

சென்ட்ரல், எழும்பூா் ரயில் நிலையங்களில் தண்ணீா் தட்டுப்பாடு இல்லை: தெற்கு ரயில்வே

மகளிா் டி20: இந்தியா ஆதிக்கம்

ஆசிய குத்துச்சண்டை: இந்தியாவுக்கு 5 தங்கம்

ஐசிஎஸ்இ 10, 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவுகள் வெளியீடு: தோ்ச்சி விகிதம் அதிகரிப்பு

SCROLL FOR NEXT