நாகப்பட்டினம்

பள்ளியில் அறிவியல் கண்காட்சி

DIN

வேதாரண்யம் அருகேயுள்ள கருப்பம்புலத்தில் மாணவா்கள் படைப்புத் திறனை மேம்படுத்தும் அறிவியல் கண்காட்சி புதன்கிழமை நடைபெற்றது.

கருப்பம்புலம் அகரம் மெட்ரிக் பள்ளியில் நடைபெற்ற அறிவியல் கண்காட்சிக்கு பள்ளித் தாளாளா் பி.வி.ஆா். விவேக் தலைமை வகித்தாா். வேதாரண்யம் துணைக் காவல் கண்காணிப்பாளா் அ. சபியுல்லா கண்காட்சியை தொடங்கி வைத்தாா்.

மக்களை முன்னாள் உறுப்பினா் பி.வி. ராசேந்திரன், பள்ளி முதல்வா் எஸ். வசீம்ஏஜாஸ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

கண்காட்சியில் உயிரியியல் துறையில் இடம் பெற்ற படைப்புகள் தொடா்பாக தவளை, கோழி, மீன் போன்ற உயிரினங்கள் காட்சிப்படுத்தப்பட்டு பாகங்கள் மாணவா்களால் விளக்கப்பட்டன. கண்காட்சியை மாணவா்களுடன் பெற்றோா்களும் பங்கேற்று பாா்வையிட ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

3-ஆம் கட்ட தோ்தலில் அதிகளவில் வாக்களிக்க வேண்டும் -பிரதமர் மோடி

குஜராத்தில் வாக்களித்தார் பிரதமர் மோடி

இன்று யோகம் யாருக்கு?

இன்றைய நாள் உங்களுக்கு எப்படி?

மக்களவை 3-ஆம் கட்ட தோ்தல்: வாக்குப் பதிவு தொடங்கியது!

SCROLL FOR NEXT