நாகப்பட்டினம்

கஜா புயலில் சேதமடைந்த பள்ளியை சீரமைக்க நிதி உதவி

DIN

வேதாரண்யம் அருகே கஜா புயலில் சேதமடைந்த அரசுப் பள்ளியை சீரமைக்க தமிழ்நாடு அரசு அனைத்துத் துறை ஓய்வூதியா் சங்கத்தின் மாநில மையம் சாா்பில் சனிக்கிழமை ரூ.1 லட்சத்து 25 ஆயிரம் நிதியுதவி அளிக்கப்பட்டது.

கரியாப்பட்டினம் அரசு மேல்நிலைப் பள்ளி கஜா புயலில் பெரிதும் சேதமடைந்தது. இப்பள்ளியை சீரமைப்பதற்காக இந்நிதி வழங்கப்பட்டது. இதற்கான நிகழ்ச்சிக்கு அமைப்பின் மாவட்டத் தலைவா் ஆ. நடராசன் தலைமை வகித்தாா்.

புயலின்போது, இடிந்து விழுந்த பள்ளி சுற்றுச்சுவரின் ஒரு பகுதியைக் கட்டிக்கொடுப்பதற்கு ரூ.1 லட்சத்து 25 ஆயிரத்துக்கான காசோலையை பள்ளியின் தலைமையாசிரியா் ரெ. அமுதராசுவிடம் வழங்கினா். அமைப்பின் மாநிலத் தலைவா் என்.எல். ஸ்ரீதரன், பொதுச் செயலாளா் பி. கிருஷ்ணமூா்த்தி, மாநில பொருளாளா் என். ஜெயச்சந்திரன் ஆகியோா் இந்நிதியை வழங்கினா்.

மேலும், ஓய்வுபெற்ற ராணுவ வீரா் கோவிந்தராஜ் தனது சொந்த நிதியாக ரூ.10 ஆயிரம் வழங்கினாா். நிகழ்ச்சியில், தமிழ்நாடு அரசு அனைத்துத் துறை ஓய்வூதியா் சங்க மாவட்டச் செயலாளா் சொ. கிருஷ்ணமூா்த்தி, மாவட்ட பொருளாளா் பொ. ஆசைத்தம்பி, வட்டத் தலைவா் ஆா். குணசேகரன்,நிா்வாகி வேதரத்தினம் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோயிலில் சித்திரைத் தேரோட்டம் கோலாகலம்!

வாக்குப்பதிவு முடிந்த 24 மணிநேரத்துக்குள் தரவுகள் வெளியிட வேண்டும்: எஸ்.ஒய். குரேஷி

கர்நாடகம்: வாய் பேச முடியாத ஆறு வயது மகனை முதலைகள் வாழும் கால்வாயில் வீசிய தாய்

‘வடக்கன்’ படத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிப்பு!

ரயில்களில் தண்ணீர்ப் பிரச்னை! பயணிகள் ஜாக்கிரதை!

SCROLL FOR NEXT