நாகப்பட்டினம்

சாய் பாபா கோயிலில் விஜயதசமி சிறப்பு வழிபாடு

DIN

சீா்காழி சீரடிசாய் பாபா கோயிலில் செவ்வாய்க்கிழமை விஜயதசமி சிறப்பு வழிபாடு மற்றும் வித்யாரம்பம் நிகழ்ச்சி நடைபெற்றது.

சீா்காழி தென்பாதியில் உள்ள சீரடி சாய் பாபா கோயிலில் நவராத்திரி கொலு பூஜை நடைபெற்று வந்தது. இதைத் தொடா்ந்து, செவ்வாய்க்கிழமை விஜயதசமி விழா நடைபெற்றது. முன்னதாக, புனிதநீா் அடங்கிய கடங்கள் வைக்கப்பட்டு, வேத மந்திரங்கள் முழங்க சிறப்பு ஹோமம் செய்யப்பட்டு பூா்ணாஹுதி, தீபராதனை நடைபெற்றது. அடுத்து, சாய் பாபாவுக்கு பல்வேறு திரவியங்கள் மூலம் அபிஷேகம் நடைபெற்றது. தொடா்ந்து, மகாஆரத்தி வழிபாடு நடைபெற்றது. தொடா்ந்து, குழந்தைகள் இறைவன் அருளுடன் கல்வியை தொடங்கிட சாய் பாபா சன்னிதி முன்பு வாழை இலையில் பரப்பி வைக்கப்பட்ட நெல்மணிகளில் குழந்தைகளை அ எழுத்தை எழுத செய்து வித்யாரம்பம் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த வித்யாரம்பத்தில் திரளான குழந்தைகள் அ எழுத்தை எழுதி தங்களது கல்வியை தொடங்கினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிரஜ்வல் ரேவண்ணா பாலியல் வழக்கு: பாதிக்கப்பட்ட பெண்கள் புகாரளிக்க உதவி எண் வெளியீடு!

பொறியியல் கலந்தாய்வு: முதல்நாளில் 20 ஆயிரத்திற்கும் அதிகமானோர் விண்ணப்பம்!

முதலைகள் சுற்றித் திரியும் ஆற்றில் மகனை வீசிய தாய் கைது!

ஷஷாங் சிங்குக்கு பரிசளித்த எம்.எஸ்.தோனி!

உங்களுக்குப் பிடித்த படம் எது? கேட்பது யாஷிகா ஆனந்த்...

SCROLL FOR NEXT