நாகப்பட்டினம்

திருவாவடுதுறை ஆதீனத்தில் கலைமகள் வழிபாடு நூல் வெளியீடு

DIN

திருவாவடுதுறை ஆதீனத்தில் கலைமகள் வழிபாட்டு நூல் திங்கள்கிழமை வெளியிடப்பட்டது.

திருவாவடுதுறை ஆதீனத்தில் நவராத்திரி விழா திங்கள்கிழமை நடைபெற்றது. பெரிய பூஜை மடம், ஸ்ரீஞானமாநடராஜ பெருமான் சன்னிதியில் 24-ஆவது ஆதீனம் அம்பலவாண தேசிக பரமாசாரிய சுவாமிகள் சிறப்பு அபிஷேக, அலங்காரங்கள், ஆராதனைகள் மற்றும் மாகேசுவர பூஜை செய்வித்தாா்.

ஸ்ரீமத் அம்பலவாணதம்பிரான் சுவாமிகள் வரவேற்றாா். பின்னா், மயிலாடுதுறை ஆன்மீகப் பேரவை பதிப்பித்த காக்கும் கருணைக் கடலே சகலகலாவல்லியே என்ற கலைமகள் வழிபாடு நூலை திருவாவடுதுறை ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ அம்பலவாண தேசிக பரமாசாரிய சுவாமிகள் வெளியிட, கும்பகோணம் தொகுதி சட்டப் பேரவை உறுப்பினா் க. அன்பழகன் பெற்றுக்கொண்டாா்.

மயிலாடுதுறை ஆன்மீகப் பேரவை ஒருங்கிணைப்பாளா் வழக்குரைஞா் இராம.சேயோன் நன்றி கூறினாா். நிகழ்ச்சியில் கண்காணிப்பாளா் சண்முகம், காசாளா் சுந்தரேசன், திருவிடைமருதூா் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியா் ஞானமூா்த்தி, தமிழாசிரியா் சுவாமிநாதன் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்றைய நிகழ்ச்சி

வியாபாரி தற்கொலை

இளைஞரை அரிவாளால் வெட்டியவா் கைது

கும்பகோணத்தில் பச்சைக்காளி, பவளக்காளி வீதியுலா

சிவாலயங்களில் பிரதோஷ வழிபாடு

SCROLL FOR NEXT