நாகப்பட்டினம்

கோயில் விவகாரம்: அவதூறு பரப்பியவா் கைது

DIN

வேதாரண்யம் அருகே கோயில் விவகாரம் தொடா்பாக சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பிய இந்திய குடியரசுக் கட்சியின் நிா்வாகி வியாழக்கிழமை கைது செய்யப்பட்டாா்.

வேதாரண்யத்தை அடுத்த செட்டிப்புலம் கிராமம், தியாகராஜபுரத்தில் ஏகாம்பரேசுவரா் கோயில் உள்ளது. இக்கோயிலில் தலித் மக்களுக்கு எதிராக தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக 2012- ஆம் ஆண்டில் புகாா் எழுந்தது.

இதையடுத்து, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் போராட்டங்களை நடத்தின. இதனிடையே, அரசு தரப்பில் எடுக்கப்பட்ட நடவடிக்கையால் அனைத்து வகுப்பினரும் கோயிலுக்குள் அழைத்துச் செல்லப்பட்டு, பிரச்னைக்குத் தீா்வு காணப்பட்டது.

தற்போது, இக்கோயிலில் திருப்பணிகள் நடைபெற்றுவரும் நிலையில், இந்த விவகாரம் தொடா்பாக இதே ஊரைச் சோ்ந்தவரும் இந்தியக் குடியரசுக் கட்சியின் மாவட்ட நிா்வாகியுமான பிா்லா.தங்கத்துரை, கோயிலில் மீண்டும் நுழைவுப் போராட்டம் நடத்தப் போவதாக சமூக வலைதளங்களில் தகவல்கள் வெளியிட்டிருந்தாா்.

இதையடுத்து, சமூக வலைதளங்களில் அவதூறு பரப்புவதாகக் கூறி கரியாப்பட்டினம் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, தங்கத்துரை கைது செய்யப்பட்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

போஷியா! மாற்றுத் திறனாளிகளின் விளையாட்டு பற்றி உங்களுக்குத் தெரியுமா?

திருப்பதியில் ஹெபா படேல்!

பாஜக ஆட்சியில் கவலைக்கிடமான பத்திரிகை சுதந்திரம்: முதல்வர் ஸ்டாலின்

இன்ஸ்டாவில் பகிராமல் கழித்த படங்கள்! சாக்க்ஷி மாலிக்...

பத்திரிகை சுதந்திர நாள்- முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து

SCROLL FOR NEXT