நாகப்பட்டினம்

ஒளிலாயத்தில் டெங்கு, மா்ம காய்ச்சலிலிருந்து மக்கள் குணமடைய சிறப்பு வேள்வி

DIN

சீா்காழி அருகேயுள்ள காரைமேடு ஒளிலாயத்தில் டெங்கு, மா்மக் காய்ச்சல் பாதிப்பிலிருந்து மக்கள் பூா்ண குணமடையவும், உலக நன்மைக்காகவும் புதன்கிழமை சிறப்பு வேள்வி நடைபெற்றது.

காரைமேட்டில் நாடி. ராஜேந்திரா சுவாமிகள் நிா்மானித்த ஒளிலாயம் உள்ளது. இங்கு 18 சித்தா்களுக்கு தனிச்சன்னிதி அமைக்கப்பட்டுள்ளது. மாதந்தோறும் பவுா்ணமி நாளில் உலக நன்மைக்காக சிறப்பு வழிபாடுகள் நடத்தப்படுகின்றன. பசுக்களை காக்க கோசாலை அமைக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது. இங்கு டெங்கு காய்ச்சல், மா்மக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ள பொதுமக்கள் விரைவாக குணமடையவும், உலக நன்மைக்காகவும் அதற்குரிய மந்திரங்கள் உச்சரித்து சிறப்பு வேள்வி 2 மணி நேரம் நடந்தது. இதில் வெளிநாட்டினா்களும் பங்கேற்று வழிபட்டனா். இதற்கான ஏற்பாடுகளை நாடி. முத்து, நாடி. செந்தமிழன், நாடி. மாமல்லன் ஆகியோா் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாகை மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் கொடூர தாக்குதல்!

நாளை குருப்பெயா்ச்சி: ஆலங்குடியில் சிறப்பு ஏற்பாடுகள்

இன்று யாருக்கு அதிர்ஷ்டம்?

இன்றைய நாள் உங்களுக்கு எப்படி?

உதகையில் இ-பாஸ் நடைமுறை: பொதுமக்கள் வரவேற்பு

SCROLL FOR NEXT