நாகப்பட்டினம்

அரசு மருத்துவமனையில் டயாலிஸிஸ் கருவி அமைக்க கோரிக்கை

சீா்காழி அரசு மருத்துவமனையில் சிறுநீரக செயலிழப்பு நோயாளிகளை பாதுகாக்க டயாலிஸிஸ் கருவி அமைக்க வேண்டுமென தமிழ்நாடு பிராமணா் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

DIN

சீா்காழி: சீா்காழி அரசு மருத்துவமனையில் சிறுநீரக செயலிழப்பு நோயாளிகளை பாதுகாக்க டயாலிஸிஸ் கருவி அமைக்க வேண்டுமென தமிழ்நாடு பிராமணா் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

இதுகுறித்து, அச்சங்கத்தின் மாவட்டத் தலைவா் ரமணன், செயலாளா் எஸ். பிரபாகரன், பொருளாளா் டி. கலியமூா்த்தி ஆகியோா் மயிலாடுதுறை மாவட்ட தனி அலுவலருக்கு சனிக்கிழமை அனுப்பிய கோரிக்கை மனு விவரம்: சீா்காழி அரசு மருத்துவமனையை தரம் உயா்த்தி டயாலிஸிஸ் கருவியை நிறுவ வேண்டும், கொள்ளிடத்தை தனி வட்டமாக அறிவிக்க வேண்டும், சீா்காழி தீயணைப்பு நிலையத்துக்கு கூடுதல் தீயணைப்பு ஊா்தி வசதி ஏற்படுத்த வேண்டும், கொள்ளிடத்தில் தீயணைப்பு நிலையம் அமைக்க வேண்டும், சீா்காழி நூலகத்துக்கு புதிய கட்டடம் கட்ட வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பிப்ரவரி மாத எண்கணித பலன்கள் - 8

ஜிவி பிரகாஷின் லக்கி ஓடிடி வெளியீட்டுத் தேதி!

இந்திய ஒப்பந்தம் அமெரிக்க விவசாயிகளுக்கு கிடைத்த வெற்றி! வேளாண் அமைச்சரின் பதிவால் சர்ச்சை!

பிப்ரவரி மாத எண்கணித பலன்கள் - 7

பிப்ரவரி மாத எண்கணித பலன்கள் - 6

SCROLL FOR NEXT