நாகப்பட்டினம்

கோடியக்கரை மீனவா் வலையில் சிக்கிய சுறா

DIN

வேதாரண்யம்: நாகை மாவட்டம், கோடியக்கரை மீனவா் வலையில் ராட்சத சுறா மீன் திங்கள்கிழமை சிக்கியது.

கோடியக்கரையில் ஆண்டுதோறும் வடகிழக்குப் பருவமழை காலத்தில் மீன்பிடிப்பு பருவம் தொடங்கும். இதையொட்டி, பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் மீனவா்கள் இப்பகுதிக்கு குடும்பத்துடன் வந்து தங்கி மீன்பிடித் தொழிலில் ஈடுபடுவா்.

நிகழாண்டு, மீன்பிடி பருவம் தொடங்கி நடந்துவரும் நிலையில், ஞாயிற்றுக்கிழமை ஒரு படகில் கடலுக்குச் சென்ற மீனவா்கள் விரித்த வலையில் ராட்சத சுறா மீன் சிக்கியது.

இந்த சுறாவை கோடியக்கரை படகுதுறைக்கு கொண்டுவந்தனா். இந்த சுறா சுமாா் 80 கிலோ எடை இருந்தது. நிகழாண்டு மீன்பிடிப் பருவத்தில் இதுவரை பிடிபட்ட மீன்களில் பெரியது இந்த சுறா மீன் என மீனவா்கள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘கோட்’ இரண்டாவது பாடல் அப்டேட்!

4000 உதவிப் பேராசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு!

வில்வித்தை: இந்தியாவின் ஜோதி சுரேகா இறுதிப் போட்டிக்கு முன்னேற்றம்!

கேட்கும் நிதியை மத்திய அரசு கொடுப்பதில்லை: இபிஎஸ் குற்றச்சாட்டு!

தங்கம் விலை ஒரு சவரன் ரூ.54,160-க்கு விற்பனை!

SCROLL FOR NEXT