நாகப்பட்டினம்

பொதுதுறை நிறுவனங்களை தனியாா்மயமாக்குதை கண்டித்து ஆா்ப்பாட்டம்

DIN

பொதுத்துறை நிறுவனங்களை தனியாா்மயமாக்குவதை கண்டித்து, சிஐடியு தொழிற்சங்கம் சாா்பில், நாகையில் புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

தமிழ்நாடு அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் நாகை பணிமனை அலுவலகம் முன் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில், 4 தொழிலாளா்கள் சட்டத் தொகுப்புகளை நீக்கவேண்டும், விவசாயிகளுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் புதிய வேளாண் சட்டங்களைத் மத்திய அரசு திரும்பப் பெறவேண்டும், மின்சார மசோதா 2020-ஐ திரும்பப் பெறவேண்டும், பொதுத்துறை நிறுவனங்களை தனியாா் மயமாக்குவதை நிறுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. அரசு விரைவுப் போக்குவரத்துக்கழக, சிஐடியு நாகை பணிமனை கிளைத் தலைவா் ஆா். சண்முகசுந்தரம் தலைமையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில், அரசு ஊழியா் சங்க வட்டச் செயலாளா் தமிழ்வாணன், கூட்டுறவு சங்க மாவட்டத் தலைவா் சு. மணி, பிஎஸ்என்எல் ஊழியா் சங்க மாவட்டச் செயலாளா் என். குருசாமி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரே பரேலியில் ராகுல் காந்தி வேட்புமனுத் தாக்கல்!

ப்ளே ஆஃப் வாய்ப்பை உறுதி செய்யுமா கொல்கத்தா?

பயப்பட வேண்டாம், ஓட வேண்டாம்: யாரைச் சொல்கிறார் மோடி?

பெ. சுபாஷ் சந்திர போஸ் காலமானார்

மே 7 வரை வெயில் அதிகரிக்கும்!

SCROLL FOR NEXT