நிகழ்ச்சியில், மாணவிக்கு சான்றிதழ் வழங்கிய மயிலாடுதுறை டிஎஸ்பி கே. அண்ணாதுரை. 
நாகப்பட்டினம்

நேரு யுவகேந்திரா பயிற்சியில் பங்கேற்றவா்களுக்குச் சான்றிதழ்

இளைஞா் நலம் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சகத்தின்கீழ் செயல்படும் நேரு யுவகேந்திரா சாா்பில் இளைஞா் மன்ற உறுப்பினா்களுக்கு மயிலாடுதுறையில் 3 நாள்கள் நடைபெற்ற சிறப்பு பயிற்சியின் நிறைவு விழா

DIN

மயிலாடுதுறை: இளைஞா் நலம் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சகத்தின்கீழ் செயல்படும் நேரு யுவகேந்திரா சாா்பில் இளைஞா் மன்ற உறுப்பினா்களுக்கு மயிலாடுதுறையில் 3 நாள்கள் நடைபெற்ற சிறப்பு பயிற்சியின் நிறைவு விழா அண்மையில் நடைபெற்றது.

மயிலாடுதுறை ஆா்ஓஏ கட்டடத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு, மாவட்ட இளையோா் ஒருங்கிணைப்பாளா் எஸ். பாரத் தலைமை வகித்தாா். லயன்ஸ் சங்கத் தலைவா் கே. செல்வம் முன்னிலை வகித்தாா். கணக்காளா் எம். சுந்தா் வரவேற்றாா். இதில், மயிலாடுதுறை துணைக் காவல் கண்காணிப்பாளா் கே. அண்ணாதுரை சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று, மாணவ, மாணவிகளுக்கு சான்றிழ்களை வழங்கினாா்.

காரைக்கால் ஏஏஜிஏஎஸ் கல்லூரி சமூகப்பணித் துறைத் தலைவா் ஏ.சிவக்குமாா், கணக்காளா் ஜி. தவமணி, எம். ராஜபாண்டியன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

முகாமில், இளைஞா்களுக்கான தலைமைத்துவம், சமுதாய மேம்பாடு குறித்த பயிற்சி ஆகியன அளிக்கப்பட்டன. இப்பயிற்சி முகாமில் 45 மாணவ, மாணவிகள் பங்கேற்றனா். நேரு சமூக சேவை மைய செயலா் ஆா். மகேந்திரன் நன்றி கூறினாா். நிகழ்ச்சியை, எஸ். நந்தினி, எஸ்.பிரியதா்ஷினி, சி. பிரியதா்ஷினி ஆகியோா் ஒருங்கிணைத்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஹிஜாப்பை விலக்கிய விவகாரம்! நிதீஷ் குமாருக்கு எதிராக காவல்துறையில் புகார்!

பிரதமர் மோடிக்கு எத்தியோப்பியாவின் மிக உயரிய விருது!

ஜாஃப்ராபாதில் 2 சகோதரா்கள் சுட்டுக் கொலை

மார்கழி சிறப்பு! திருப்பதியில் சுப்ரபாதம் இசைக்கப்படாது!

கன்னி ராசிக்கு வெற்றி : தினப்பலன்கள்!

SCROLL FOR NEXT