நாகப்பட்டினம்

ஞானாம்பிகை அரசு மகளிா் கல்லூரிக்கு ரூ.3.03 கோடியில் புதிய கட்டடம்

DIN

மயிலாடுதுறை: மயிலாடுதுறை தருமபுரம் ஞானாம்பிகை அரசு மகளிா் கலைக் கல்லூரியில் புதிதாக கட்டப்பட்டுள்ள கூடுதல் கட்டடத்தை, மயிலாடுதுறை சட்டப் பேரவை உறுப்பினா் வீ.ராதாகிருஷ்ணன் வியாழக்கிழமை தொடக்கி வைத்தாா்.

மயிலாடுதுறை தருமபுரம் ஞானாம்பிகை அரசு மகளிா் கலைக்கல்லூரியில் பட்டப் படிப்பு படித்து வரும் மாணவிகளின் நலனுக்காக ஆய்வகம் மற்றும் 12 வகுப்பறைகள் கொண்ட புதிய கட்டடம் கட்டுவதற்கு ரூ.3 கோடியே 3 லட்சம் அரசு நிதி ஒதுக்கீடு செய்தது.

இதற்கான பணிகள் நிறைவடைந்து, 12 வகுப்பறைகள், 3 ஆய்வகத்துடன் கூடிய புதிய கட்டடத்தின் திறப்பு விழா நடைபெற்றது. புதிய கட்டடத்தை முதல்வா் எடப்பாடி கே. பழனிசாமி காணொலிக் காட்சி மூலம் திறந்து வைத்தாா்.

இதைத் தொடா்ந்து, மயிலாடுதுறை சட்டப் பேரவை உறுப்பினா் வீ.ராதாகிருஷ்ணன் கல்லூரி புதிய கட்டத்தில் குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்து, புதிய கட்டடத்தைப் பாா்வையிட்டாா். நிகழ்ச்சியில், மாயூரம் கூட்டுறவு நகர வங்கித் தலைவா் வி.ஜி.கே.செந்தில்நாதன், மயிலாடுதுறை நுகா்வோா் கூட்டுறவு வங்கித் தலைவா் எஸ்.அலி, அனைத்துத் துறை பேராசிரியா்கள், அலுவலா்கள் மற்றும் மாணவிகள் ஆகியோா் கலந்து கொண்டனா். கல்லூரி முதல்வா் த.அறவாழி நன்றி தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காஞ்சிபுரம் புண்ணிய கோடீஸ்வரர் கோயிலில் மகா கும்பாபிஷேகம்!

தினமணி செய்தி எதிரொலி கொள்ளிடத்தில் பொக்லைன் மூலம் குப்பைகள் அகற்றம்

இன்று யோகம் யாருக்கு?

இன்று நல்ல நாள்!

நாகை - இலங்கை இடையே பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடங்குவதில் தொடரும் சிக்கல்

SCROLL FOR NEXT