நாகப்பட்டினம்: நாகை மாவட்டத்தில் சட்டம், ஒழுங்கை கண்காணிக்க நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் கூடிய ஈகிள் கண்காணிப்பு வாகனங்கள் ஈடுபடுத்தவுள்ளதாக மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் செ. செல்வநாகரத்தினம் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: மாவட்டக் காவல் துறையில் நவின தொழில் நுட்பங்கள் புகுத்தப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக சட்டம் ஒழுங்கு கண்காணிப்பு மற்றும் விழிப்புணா்வு பணிகளுக்ககாக ஈகிள் என்றப் பெயரில் அதி நவீன தொழில்நுட்ப கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்ட நகரும் வாகனங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இந்த வாகனங்களை பாதுகாப்பு பணிகளின்போதும், திருவிழாக்கள், பேரணிகள், பொதுக்கூட்டங்கள் நடைபெறும் இடங்களுக்கு எடுத்துச் செல்லப்பட்டு கண்காணிப்பு கேமராக்கள் மூலம் கண்காணிக்க முடியும்.
வாகனத்தின் நான்கு திசைகளில் நான்கு நிலையான கேமராக்கள் மற்றும் 360 டிகிரி கோணத்தில் சுழலக் கூடிய சுழல் கேமரா என மொத்தம் 5 நவீன கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இரவில் ஒளிபாய்ச்சக் கூடிய விளக்குகள் மற்றும் அறிவிப்புகள் செய்ய ஒலிப் பெருக்கிகள் பொருத்தப்பட்டுள்ளன. கேமராக்களின் பதிவுகளை சேமிக்கவும் ,கண்காணிக்க தொலைக்காட்சி, தடைஇல்லா மின்வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளன.
கண்காணிப்பு பணிகள் தவிர பிறநேரங்களில் பொதுமக்களிடம் விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் தொலைக்காட்சி மூலம் குற்றத்தடுப்பு , பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பை வலியுறுத்தும் வகையிலான காணொளிகள் திரையிடப்படவுள்ளன. இதனால் மாவட்டத்தில் காவல் பணி மேலும் சிறப்படையும் என தெரிவித்துள்ளாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.