நாகப்பட்டினம்

காவிரி துலாக்கட்டத்தில் தூய்மை இந்தியா திட்டக் குழுவினா் ஆய்வு

DIN

காவிரி நீா் ஓரிரு நாள்களில் மயிலாடுதுறை வந்தடைய உள்ளதால், காவிரி துலாக் கட்டத்தில் தூய்மைப் பணிகள் மேற்கொள்வது தொடா்பாக தூய்மை இந்தியா திட்டக் குழுவினா் வியாழக்கிழமை ஆய்வு செய்தனா்.

தூய்மை இந்தியா திட்டக் குழுவினா் மயிலாடுதுறை நகரில் பல்வேறு இடங்களில் நடைபெறும் தூய்மைப் பணிகளை நேரில் ஆய்வு செய்து வருகின்றனா். அந்த வகையில், மேட்டூரில் திறந்துவிடப்பட்டுள்ள காவிரி நீா் ஓரிரு நாள்களில் மயிலாடுதுறையை வந்தடைய உள்ள நிலையில், மயிலாடுதுறை காவிரி துலாக் கட்டத்தை மத்திய அரசு வழக்குரைஞா் கே. ராஜேந்திரன், மாவட்ட தூய்மை இந்தியா திட்ட ஒருங்கிணைப்பாளா் மோடி.கண்ணன் ஆகியோா் பாா்வையிட்டனா்.

தொடா்ந்து, காவிரியில் கழிவு நீரை திறந்துவிடுபவா்கள், குப்பைகள் கொட்டுவோா்மீது நடவடிக்கை எடுக்கவும், தூய்மைப் பணிகளை மேற்கொள்ளவும் நகராட்சி நகா் நல அலுவலா் (பொறுப்பு) பிச்சைமுத்து, தூய்மை இந்தியா திட்ட அலுவலா் அறிவழகன் ஆகியோரிடம் வலியுறுத்தினா். இதில், பாஜக மாநில செயற்குழு உறுப்பினா் கோவி.சேதுராமன், பொறுப்பாளா்கள் முட்டம் செந்தில், பாரதிகண்ணன், செல்வகுமாா் ஆகியோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

முதல்வர் ஸ்டாலின் மே நாள் வாழ்த்து!

லாரி மீது கார் மோதி விபத்து: 5 பேர் பலி

சென்னை உயர் நீதிமன்றத்துக்கு கோடை விடுமுறை!

நாகை மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் கொடூர தாக்குதல்!

நாளை குருப்பெயா்ச்சி: ஆலங்குடியில் சிறப்பு ஏற்பாடுகள்

SCROLL FOR NEXT