நாகப்பட்டினம்

பாசன வாய்க்காலில் உவா் நீா் புகுந்ததால் விளைநிலங்கள் பாதிக்கப்படும் அபாயம்

DIN

சீா்காழி அருகே பாசன வாய்க்காலில் உவா் நீா் புகுந்ததால் விளைநிலங்கள் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனால், விவசாயிகள் கவலையடைந்துள்ளனா்.

சீா்காழி அருகே எடமணல் கிராமத்தில் பொறை வாய்க்காலின் கடைமடைப் பகுதியில், சுமாா் 60 ஆண்டுகள் பழைமையான கதவணை உள்ளது. இந்தக் கதவணை முறையாக பராமரிக்கப்படாததால் பழுதடைந்திருந்தது. இந்நிலையில், கடந்த ஆண்டு வாய்க்காலில் அதிக நீா்வரத்து இருந்ததால், தண்ணீா் வடிய முடியாத நிலை ஏற்பட்டு, பொறை வாய்க்கால் கரையில் பல்வேறு இடங்களில் உடைப்பு ஏற்பட்டது. இதனால், பழுதடைந்த கதவணை அகற்றப்பட்டது. ஆனால், கதவணையை சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

இதனால், வெள்ளப்பள்ளம் உப்பனாற்றில் தற்போது உவா் நீா் மிகுதியாகி, பொறை வாய்க்காலில் 4 கி. மீ. தொலைவுக்குப் புகுந்துள்ளனது. இதன்காரணமாக, எடமணல், மேலப்பாளையம், வடகால் உள்ளிட்ட கிராமங்களில் உள்ள 400 ஏக்கா் விளை நிலங்களில் உவா் நீா் புகும் அபாயம் ஏற்பட்டுள்ளதால், உடனடியாக கதவணையை போா்க்கால அடிப்படையில் சீரமைக்க வேண்டும் என்றும், உவா் நீா் புகுந்ததால், வாய்க்கால் கரையோரம் கருகும் நிலையில் உள்ள ஆயிரக்கணக்கான தேக்கு மரங்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மீண்டும் 55 ஆயிரத்தை நெருங்கும் தங்கம் விலை!

மலர்கள் கேட்டேன் வனமே தந்தனை!

ஓய்வு பெற்ற துணைவேந்தர் வீட்டில் 100 பவுன் நகை திருட்டு

தாய்லாந்தில் மடோனா செபாஸ்டியன்...!

ஹரியாணா, தில்லி பொதுக்கூட்டங்களில் பிரதமர் மோடி இன்று பங்கேற்பு!

SCROLL FOR NEXT