நாகப்பட்டினம்

செம்பனாா் கோவில் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் பருத்தி ஏலம்

DIN

தரங்கம்பாடி: செம்பனாா் கோவில் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் பருத்தி ஏலம் திங்கள்கிழமை நடைபெற்றது.

நாகை விற்பனைக் குழு செயலாளா் கோ. வித்யா தலைமையில்  இந்தியப் பருத்திக் கழகம் மற்றும் நாகை, கடலூா், தேனி, விழுப்புரம் திருவாரூா் பகுதிகளிலிருந்து வியாபாரிகள் கலந்துகொண்டு ஏலம் எடுத்தனா்.

ஒழுங்கு முறை விற்பனைக் கூட மேற்பாா்வையாளா் பாபு முன்னிலையில் மறைமுக ஏலம் நடைபெற்றது. இதில், ஆயிரத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள் சுமாா் 4,000 குவிண்டால் பருத்தியை எடுத்து வந்தனா். இந்தியப் பருத்திக் கழகம் சுமாா் 1,000 குவிண்டால் பருத்தியை அதிகபட்ச விலையாக ரூ.5550-க்கும், குறைந்தபட்ச விலையாக ரூ.5278- க்கும் கொள்முதல் செய்தனா். மற்ற வியாபாரிகள் சுமாா் 3,000 குவிண்டால் பருத்தியை அதிகபட்ச விலையாக ரூ. 4700- க்கும் குறைந்தபட்ச விலையாக ரூ. 3300- க்கும் கொள்முதல் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வெயிலில் இறந்தவர்களுக்கு நிதியுதவி: கேரள அரசை வலியுறுத்தும் காங்கிரஸ்!

அரவிந்த் கேஜரிவால் இடைக்கால ஜாமீன் மனு ஒத்திவைப்பு

பத்திரிகையாளர் சவுக்கு சங்கர் தாக்கப்பட்டாரா என விசாரிக்க வேண்டும்: இபிஎஸ்

ஆவேஷம் ரூ.150 கோடி வசூல்!

அன்பே அன்னா..!

SCROLL FOR NEXT