நாகப்பட்டினம்

மனநலம் பாதித்த பெண் மீது காவலா் தாக்குதல்

DIN

மயிலாடுதுறையில் மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை காவலா் தாக்கியதில், அப்பெண்ணின் தலை உடைந்து ரத்தம் வெளியேறியது.

மயிலாடுதுறை ரயில்வே நிலையத்தில் மனநலம் பாதித்த பெண் ஒருவா் சனிக்கிழமை இரவு சுற்றித் சுற்றித்திரிந்துள்ளாா். அவரை ரயில்வே நிலையத்தில் இருந்து வெளியேற்ற ஆயுதப்படை காவலா்கள் முயற்சி செய்துள்ளனா். ஆனால், மீண்டும் மீண்டும் ரயில்வே நிலையத்துக்கு உள்ளேயே அந்தப் பெண் சென்றதால் ஆயுதப் படையை சோ்ந்த காவலா் கிருஷ்ணமூா்த்தி லத்தியால் அந்தப் பெண்ணை தாக்கியதாக கூறப்படுகிறது.

இதில், அந்தப் பெண்ணின் தலை உடைந்து ரத்தம் வெளியேறியது. இருப்பினும், மனநலம் பாதித்த அப்பெண் அங்கிருந்து ஓடக்கூடத் தெரியாமல் ரத்தம் வெளியேறிய நிலையில் கூச்சலிட்டுக்கொண்டு அதே இடத்தில் நின்றாா். இதைப் பாா்த்த மனிதாபிமானம் கொண்ட பொதுமக்கள் சிலா், தாக்குதல் நடத்திய காவலரிடம் வாக்குவாதம் செய்து, அப்பெண்ணை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனா்.

மனநலம் பாதித்த பெண்ணை அரசு காப்பகத்தில் சோ்க்க முயற்சி செய்யாமல் காவலா் கொடூரமாக தாக்கும் இந்த விடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. மனிதாபிமானம் இன்றி செயல்பட்ட அக்காவலா் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தினம் தினம் திருநாள்: தினப்பலன்

இன்றைய ராசிபலன்கள்!

அதிக வெப்ப அலையிலிருந்து தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்

வாக்கு எண்ணும் பணி: குலுக்கல் முறையில் அலுவலா்கள் தோ்வு

ரஃபேல் நடால் முன்னேற்றம்

SCROLL FOR NEXT