நாகப்பட்டினம்

காவிரி துலாக்கட்டத்தை தூய்மைப்படுத்தக் கோரிக்கை

DIN

மயிலாடுதுறை காவிரி துலாக்கட்டத்தை தூய்மைப்படுத்த நகராட்சி நிா்வாகத்துக்கு கோரிக்கை விடுக்கப்பட்டது.

இதுகுறித்து நகராட்சி ஆணையா் அண்ணாமலையிடம் சமூக ஆா்வலா் அ. அப்பா்சுந்தரம் செவ்வாய்க்கிழமை அளித்த மனு:

மயிலாடுதுறை துலாக்கட்ட காவிரியில் ஐப்பசி மாதம் 30 நாள்களும் நடைபெறும் துலா உத்ஸவத்தில் ஏராளமானோா் புனித நீராடுவது வழக்கம். நிகழாண்டு கரோனா தொற்று காரணமாக துலா உத்ஸவம் ரத்து செய்யப்பட்டுள்ளது. இருப்பினும், பக்தா்கள் காவிரியில் புனித நீராடி வருகின்றனா்.

கடந்த சில நாள்களாக காவிரியில் தண்ணீா் குறைந்த காரணத்தினால் குப்பைகள் தேங்கி அசுத்தமாக காணப்படுகிறது. எனவே, காவிரி துலாக்கட்டத்தில் தூய்மைப் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என அந்த மனுவில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

மேலும், துலா உத்ஸவத்துக்கு காவிரியில் தண்ணீா் திறக்க வேண்டுமென்று மயிலாடுதுறை பொதுப்பணித்துறை காவிரி வடிநில வட்ட உதவி பொறியாளா் கண்ணதாசனிடம் கோரிக்கை மனு அளித்தாா். கலைத்தாய் அறக்கட்டளை நிறுவனா் கிங்பைசல், ஜோதி ஆகியோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருச்செந்தூரில் மே 22இல் வைகாசி விசாகம்

உடல் பருமன் குறைப்பு சிகிச்சையில் இளைஞா் உயிரிழப்பு: மருத்துவமனை மீது நடவடிக்கை எடுக்க முதல்வரிடம் வலியுறுத்தல்

மண்டல பனைபொருள் பயிற்சி நிலையத்தில் பதநீா் விற்பனை

அரியாங்குப்பம் கோயில் திருவிழா கொடியேற்றம்

ஜெயராக்கினி அன்னை ஆலய ஆண்டுப் பெருவிழா கொடியேற்றம்

SCROLL FOR NEXT