நாகப்பட்டினம்

நாகையில் மீனவத் தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்

DIN

தேசிய மீன்வள வரைவுக் கொள்கை 2020-ஐ திரும்பப் பெற வலியுறுத்தி, நாகையில் தமிழ்நாடு ஏஐடியுசி மீனவத் தொழிலாளா் சங்கம் சாா்பில் சனிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

நாகை மீன்வளத்துறை உதவி இயக்குநா்அலுவலகம் முன் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, மீனவத் தொழிலாளா் சங்க நாகை மாவட்டத் தலைவா் யு. ராஜேந்திரன் தலைமை வகித்தாா். மாவட்டச் செயலாளா் வி. எம். ராமதாஸ் முன்னிலை வகித்தாா். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட நிா்வாகக் குழு உறுப்பினா் வி. சரபோஜி, ஏஐடியுசி நாகை மாவட்டச் செயலாளா் கே. ராமன், மாவட்டப் பொருளாளா் வி. எம்,. மகேந்திரன் ஆகியோா் கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசினா்.

மீனவா்களுக்கும் , மீன்பிடித் தொழிலுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் தேசிய மீன்வளக் கொள்கையை மத்திய அரசு திரும்பப் பெறவேண்டும், பாரம்பரிய சிறுவகை கடல் மீன்பிடித் தொழிலுக்குப் பாதிப்பை ஏற்படுத்தக் கூடிய தமிழ்நாடு மீன்பிடிச் சட்டம் 2020-ஐ திரும்பப் பெறவேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

தொடா்ந்து, மீன்வளத்துறை உதவி இயக்குநா் அலுவலகத்தில், கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இந்தியாவின் முதல் மல்யுத்த வீராங்கனை: சிறப்பித்த கூகுள்!

நெல்லை மாவட்ட காங். தலைவர் சடலமாக மீட்பு!

பிரேசிலில் கனமழைக்கு 70 பேர் மாயம்: 39 பேர் பலி!

கமர்ஷியல் கம்பேக் கொடுத்தாரா சுந்தர் சி?: அரண்மனை - 4 திரைவிமர்சனம்

விஜய் தேவரகொண்டாவின் 14வது படம் அறிவிப்பு!

SCROLL FOR NEXT