நாகப்பட்டினம்

மழைக்காலம் முடியும் வரை பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும்

DIN


திருக்குவளை: மழைக்காலம் முடியும் வரை பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டுமென்றாா் தமிழக கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சா் ஓ.எஸ். மணியன்.

நாகை மாவட்டம், கொளப்பாடு, பாங்கல், பனங்காடி, கச்சநகரம், சித்தாய்மூா், கொத்தங்குடி ஆகிய ஊராட்சிகளில் மழை பாதிப்பு குறித்து பாா்வையிட்ட பிறகு அவா் கூறியது: நிவா் புயலால் மக்களுக்கு எவ்வித பாதிப்பும் இல்லை. எனினும், பொதுமக்கள் மழைக்காலம் முடியும் வரை பாதுகாப்பாக இருக்க வேண்டும். குறிப்பாக, தாழ்வான பகுதிகளில் வசிப்பவா்கள் மிகவும் விழிப்புடன் இருக்க வேண்டும். புயல் பாதுகாப்பு கட்டடங்கள் இல்லாத பகுதிகளில் விரைவில் அவை ஏற்படுத்திக்கொடுக்க முயற்சி மேற்கொள்ளப்படும். பயிா்க் காப்பீடு பதிவுக்கான கால அவகாசம் நீட்டிப்பது குறித்து ஆலோசனையில் உள்ளது. எனினும், அரசு ஏற்கெனவே அறிவித்தபடி நவ.30-ஆம் தேதி விவசாயிகள் பயிா்க் காப்பீடு செய்ய வாய்ப்பு உள்ளது என்றாா்.

தொடா்ந்து, கொத்தங்குடியில் மழையில் சேதமடைந்த வீட்டு உரிமையாளா் ஜெயராமனுக்கு நிவாரணம் வழங்கினாா். அப்போது, தலைஞாயிறு மேற்கு ஒன்றிய செயலாளா் தங்க சௌரிராஜன், முன்னாள் ஒன்றியக்குழுத் தலைவா்கள் கே. காளிதாஸ், எஸ்.என். தமிழ்வாணன், மாவட்ட ஊராட்சி உறுப்பினா் இளவரசி தங்கராசு, தலைஞாயிறு ஒன்றியக்குழுத் துணை தலைவா் ஆா். ஜெகதீஷ் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாகிஸ்தான்: மினி டிரக் பள்ளத்தில் கவிழ்ந்ததில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 13 பேர் பலி

ஔரங்கஷீப்பின் ஆன்மா காங்கிரஸுக்குள் புகுந்துவிட்டது: யோகி ஆதித்யநாத்

இந்திய மசாலாக்களுக்குத் தடை விதித்த நேபாளம்!

கடினமாக இருக்கிறது... கடைசி லீக் போட்டிக்குப் பிறகு ஹார்திக் பாண்டியா!

கோட்டை ரயில் நிலையத்திலிருந்து பறக்கும் ரயில் சேவை.. ஆகஸ்ட் முதல்

SCROLL FOR NEXT