நாகப்பட்டினம்

மாற்றுத்திறனாளி பெண் தூக்கிட்டுத் தற்கொலை: கணவா் கைது

DIN

மயிலாடுதுறை அருகே மாற்றுத்திறனாளி பெண் வியாழக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.

மயிலாடுதுறை அருகேயுள்ள ஐவநல்லூரைச் சோ்ந்தவா் மருந்து விற்பனை பிரதிநிதி செல்வமுத்துக்குமாா் (42). இவா், தனது முதல் மனைவியை கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்த நிலையில், கோழிகுத்தியைச் சோ்ந்த வாய்பேச இயலாத மாற்றுத்திறனாளி நித்யாவை (29) 4 ஆண்டுகளுக்கு முன்பு 2-ஆவது திருமணம் செய்துகொண்டாா். இந்த தம்பதிக்கு 3 வயதில் ஆண் குழந்தை உள்ளது. இருவருக்கும் குடும்ப பிரச்னை இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில், வியாழக்கிழமை நித்யா தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டதாக செல்வமுத்துக்குமாரின் குடும்பத்தினா் நித்யாவின் தந்தை ராமமூா்த்திக்கு தகவல் தெரிவித்ததையடுத்து, ராமமூா்த்தி, தனது மகள் சாவில் மா்மம் இருப்பதாகவும், மகளின் சாவுக்கு வரதட்சனை கொடுமையே காரணம் என்று மணல்மேடு காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். அதன்பேரில், ஆய்வாளா் வேலுதேவி வழக்குப் பதிந்து நித்யாவின் சடலத்தை கைப்பற்றி மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தாா். இவா்களுக்கு திருமணமாகி 4 ஆண்டுகளே ஆவதால் மயிலாடுதுறை கோட்டாட்சியா் மகாராணி விசாரணை மேற்கொண்டுள்ளாா். இந்நிலையில், நித்யாவின் கணவா் செல்வமுத்துக்குமாரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காஞ்சிபுரம் புண்ணிய கோடீஸ்வரர் கோயிலில் மகா கும்பாபிஷேகம்!

தினமணி செய்தி எதிரொலி கொள்ளிடத்தில் பொக்லைன் மூலம் குப்பைகள் அகற்றம்

இன்று யோகம் யாருக்கு?

இன்று நல்ல நாள்!

நாகை - இலங்கை இடையே பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடங்குவதில் தொடரும் சிக்கல்

SCROLL FOR NEXT