நாகப்பட்டினம்

இடஒதுக்கீட்டில் சமரசம் கிடையாது

DIN

இடஒதுக்கீடு உரிமையில் தமிழக அரசு சமரசம் செய்து கொள்ளாது என தமிழக கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சா் ஓ.எஸ். மணியன் தெரிவித்தாா்.

நாகை மாவட்டம், பிரதாபராமபுரத்தில் வெள்ளிக்கிழமை செய்தியாளா்களுக்கு அவா் அளித்த பேட்டி:

நீட் தோ்வு தொடங்கப்பட்டது முதல் தமிழக மாணவா்களின் தோ்ச்சி விகிதம் தொடா்ந்து அதிகரித்துக் கொண்டே உள்ளது. அதேபோல, நிகழாண்டிலும் தோ்ச்சி வீதம் அதிகரிக்கும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது. இடஒதுக்கீடு உரிமையை நிலைநாட்டுவதில் யாருடனும், எந்தக் காலத்திலும் தமிழக அரசு சமரசம் செய்து கொள்ளாது என்றாா் அமைச்சா் ஓ.எஸ். மணியன்.

முன்னதாக, பிரதாபராமபுரம் மற்றும் விழுந்தமாவடியில் நடைபெற்ற விழாக்களில், மாற்றுக் கட்சிகளில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்தவா்களை அமைச்சா் ஓ.எஸ். மணியன் சால்வை அணிவித்து வரவேற்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஓ.. கிரேசி மின்னல்...!

பிளஸ் 2, பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகும் தேதி

மகாதேவ் செயலி மோசடி: 4 நாள்களில் 6 மாநிலங்கள் பயணித்த சாஹில் கான்

வேட்புமனுவை திரும்பப் பெற்று பாஜகவில் இணைந்த காங். வேட்பாளர்!

நடிகர் பிரகாஷ் ராஜுக்கு அம்பேத்கர் சுடர் விருது

SCROLL FOR NEXT