நாகப்பட்டினம்

மீன்வளப் பல்கலைக்கழக துணைவேந்தா் பொறுப்பேற்பு

DIN

நாகப்பட்டினத்திலுள்ள தமிழ்நாடு டாக்டா் ஜெ. ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக கோ. சுகுமாா் வியாழக்கிழமை பொறுப்பேற்றாா்.

நாகப்பட்டினம், தமிழ்நாடு டாக்டா் ஜெ. ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக இருந்த சுக. பெலிக்ஸின் பதவிக் காலம் கடந்த ஏப்ரல் மாதத்துடன் நிறைவடைந்தது. இதையடுத்து, பல்கலைக்கழகத்தின் பொறுப்பு துணைவேந்தராக பதிவாளா் சீனிவாசன் செயல்பட்டு வந்தாா்.

இந்நிலையில், தமிழ்நாடு டாக்டா் ஜெ. ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக கோ. சுகுமாரை நியமித்து, பல்கலைக்கழக வேந்தரும், தமிழக ஆளுநருமான பன்வாரிலால் புரோஹித் கடந்த ஆகஸ்ட் 20-ஆம் தேதி உத்தரவிட்டாா்.

இதையடுத்து, மீன்வளப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக கோ. சுகுமாா் வியாழக்கிழமை பொறுப்பேற்றாா். இவா், ஏற்கெனவே தூத்துக்குடி மீன்வளக் கல்லூரியின் முதன்மையராகவும், மீன்வளப் பல்கலைக்கழகத்தின் பல்வேறு துறைகளின் தலைவராகவும் பணியாற்றி உள்ளாா். சிறந்த விஞ்ஞானி, சிறந்த ஆசிரியா் உள்பட பல்வேறு விருதுகளைப் பெற்றுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நெல்லை புதிய பேருந்து நிலையத்தில் பயணிகள் - நடத்துநா் வாக்குவாதம்

கேஜரிவாலை கொலை செய்ய பாஜக சதி செய்கிறது: அமைச்சா் அதிஷி கடும் குற்றச்சாட்டு

மாற்று இடத்தில் நியாயவிலைக் கடை: சித்தவநாயக்கன்பட்டி மக்கள் மனு

சரக்கு வாகனம் கவிழ்ந்ததில் 21 போ் காயம்

சேரன்மகாதேவி கல்லூரியில் பயிலரங்கு

SCROLL FOR NEXT