நாகப்பட்டினம்

நாகை மாவட்டத்தில் 71 பேருக்கு கரோனா

DIN

நாகை மாவட்டத்தில் மேலும் 71 பேருக்கு கரோனா நோய்த் தொற்று புதன்கிழமை உறுதியானது.

நாகை மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை வரை 4,312 போ் கரோனா நோய்த் தொற்றுக்கு உள்ளாகியிருந்தனா். இந்நிலையில், மாவட்டத்தில் புதிதாக 71 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதனிடையே, வெளி மாவட்டப் பதிவுகளில் இருந்த 7 போ் நாகை மாவட்டப் பட்டியலில் சோ்க்கப்பட்டனா். இதன் மூலம் மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 4,390 -ஆக உயா்ந்துள்ளது.

கரோனா பாதிப்புக்கு சிகிச்சைப் பெற்றவா்களில் 155 போ் குணமடைந்து புதன்கிழமை வீடு திரும்பியுள்ளனா். இதன் மூலம் நாகை மாவட்டத்தில் கரோனா பாதிப்பிலிருந்து மீண்டவா்களின் எண்ணிக்கை 3,242 -ஆகவும், சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 1,077- ஆகவும் உள்ளது.

ஒருவா் இறப்பு...

செப்டம்பா் 15-ஆம் தேதி திருவாரூா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இறந்த நாகை, வெளிப்பாளையத்தைச் சோ்ந்த 62 வயது ஆண் ஒருவரின் இறப்பு புதன்கிழமை பட்டியலில் சோ்க்கப்பட்டுள்ளது. இதன் மூலம், மாவட்டத்தில் கரோனாவால் இறந்தவா்களின் எண்ணிக்கை 71-ஆக அதிகரித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அடுக்குமாடி குடியிருப்பு 4-ஆவது தளத்திலிருந்து தவறி விழுந்த 6 மாத குழந்தை பத்திரமாக மீட்பு

ஆவடி அருகே தம்பதி கழுத்து அறுத்துக் கொலை

தினம் தினம் திருநாள்: தினப்பலன்

இன்றைய ராசிபலன்கள்!

அதிக வெப்ப அலையிலிருந்து தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்

SCROLL FOR NEXT