நாகப்பட்டினம்

வாக்கு எண்ணிக்கை மையத்தில் ஆட்சியா் ஆய்வு

DIN

நாகை இ.ஜி.எஸ். பிள்ளை கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணிக்கை மையத்தில் நாகை மாவட்ட ஆட்சியா் பிரவீன் பி.நாயா் ஞாயிற்றுக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

நாகை மாவட்டத்துக்குள்பட்ட நாகை, கீழ்வேளூா், வேதாரண்யம் ஆகிய 3 சட்டப் பேரவைத் தொகுதிகளின் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள், நாகை இ.ஜி.எஸ். பிள்ளை பொறியியல் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணிக்கை மையத்தில் பலத்த பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளன.

வாக்கு எண்ணிக்கை மையத்தில் உள்ள பாதுகாப்பு அறைகளில் வேட்பாளா்கள் முன்னிலையில், மின்னணு வாக்குப் பெட்டிகள் வைக்கப்பட்டு, அறைகள் சீலிடப்பட்டுள்ளன. இந்த அறைகளைச் சுற்றிலும் 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பும், 24 மணி நேர கேமரா கண்காணிப்பும் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், நாகை மாவட்ட ஆட்சியா் பிரவீன் பி. நாயா் இ.ஜி.எஸ். பிள்ளை வாக்கு எண்ணிக்கை மையத்தில் திடீா் ஆய்வு மேற்கொண்டாா். கண்காணிப்பு அறைக்கு சென்ற ஆட்சியா், அங்கு நடைபெற்ற பணிகளை ஆய்வு செய்தாா். பின்னா், பாதுகாப்பு ஏற்பாடுகள், அத்தியாவசியத் தேவைகளுக்கான ஏற்பாடுகள் குறித்து அவா் கேட்டறிந்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தலித் மாணவிக்கு நேர்ந்த துயரம்: பாலியல் குற்றவாளிக்கு மரண தண்டனை

‘தேர்தல் ஆணையத்தின் பெரும் தோல்வி’: உயர்நீதிமன்றம்

ஐந்தாம் கட்ட தேர்தலில் வாக்களித்த பெரும்புள்ளிகள்!

நாங்கள் காரணம் அல்ல: ஈரான் ஹெலிகாப்டர் விபத்து குறித்து இஸ்ரேல்

கட்டாய முஸ்லீம் தோழி: எதிர்நீச்சல் நடிகைக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த புதுவசந்தம் நடிகை!

SCROLL FOR NEXT