நாகப்பட்டினம்

அகஸ்தீஸ்வரசுவாமி கோயிலில் மாசிமகப் பெருவிழா கொடியேற்றம்

DIN

நாகை வெளிப்பாளையம் அருள்மிகு அகஸ்தீஸ்வரசுவாமி கோயிலில் மாசி மகப் பெருந்திருவிழா கொடியேற்றம் வியாழக்கிழமை நடைபெற்றது.

நாகை வெளிப்பாளையத்தில் உள்ள ஆனந்தவல்லி அம்பாள் சமேத அகஸ்தீஸ்வர சுவாமி கோயிலில் உள்ள சிவலிங்க திருமேனி, அகஸ்திய முனிவரால் பிரதிஷ்டை செய்யப்பட்டு, வழிபடப்பட்டது. இக்கோயிலில் மாசி மகப் பெருந்திருவிழா கொடியேற்றம் நடைபெற்றதையொட்டி சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. பிறகு, ஐதீக முறைப்படி திருக்கொடியேற்றம் நடைபெற்றது.

இவ்விழாவின் நிகழ்வாக தினமும் வெவ்வேறு வாகனங்களில் சுவாமி புறப்பாடு நடைபெறுகிறது. பிப்ரவரி 26 ஆம் தேதி தேரோட்டமும், 27 ஆம் தேதி மாசி மக தீா்த்தவாரியும் நடைபெறவுள்ளன. முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான தெப்போத்ஸவம் மாா்ச் 6 ஆம் தேதி நடைபெறுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று யோகம் யாருக்கு?

இன்று நல்ல நாள்!

நாகை - இலங்கை இடையே பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடங்குவதில் தொடரும் சிக்கல்

மண் அரிப்பு: இடிந்து விழுந்த துலாக்கட்ட சுவா்

ஹரியாணா: பேருந்து தீ பிடித்த விபத்தில் 9 போ் உயிரிழப்பு

SCROLL FOR NEXT