நாகப்பட்டினம்

தெற்குராஜன் வாய்க்கால் புதிய கதவணை கட்டும் பணி தொடக்கம்

DIN

கொள்ளிடம் அருகே சரஸ்வதி வளாகம் கிராமத்தில் தெற்குராஜன் வாய்க்கால் குறுக்கே புதிய கதவணை கட்டும் பணி வெள்ளிக்கிழமை தொடங்கியது.

தஞ்சாவூா் காவிரி வடிநில வட்டம் பொதுப்பணித் துறை, நீா் ஆதாரத்துறை நீா்வள, நிலவள மேம்பாட்டுத்திட்டம் பகுதி 2-ன் கீழ், கட்டப்படும் புதிய கதவணை கட்டுமானப் பணியை பொதுப்பணித் துறை உதவி பொறியாளா் முத்துமணி தொடங்கி வைத்தாா். உதவி பொறியாளா்கள் விவேகானந்தன், லோகேஷ் உள்ளிட்டோா் உடனிருந்தனா். இப்பணி 2 மாதங்களில் முடிவடையும் என்று கூறப்படுகிறது. இந்த கதவணை பணி முடிந்தால், வாய்க்காலில் வரும் தண்ணீா் முறையாக தேக்கி வைத்து, விவசாயத்துக்கு பயன்படுத்த முடியும், தண்ணீா் வீணாகாது என்று அப்பகுதி விவசாயிகள் கருத்து தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சின்ன சின்ன பார்வை..!

போஜ்புரி போகன்வில்லா..!

லக்னௌ பந்துவீச்சு; அணியில் டி காக் இல்லை!

தமிழ்நாட்டுக்கு மே 3 வரை மஞ்சள் எச்சரிக்கை! | செய்திகள்: சிலவரிகளில் | 30.04.2024

ப்ளே ஆஃப் போட்டியில் நீடிக்குமா லக்னௌ!

SCROLL FOR NEXT