நாகப்பட்டினம்

வைத்தீஸ்வரன்கோயிலில் 5 கோயில்களுக்கு குடமுழுக்குதருமபுரம் ஆதீனம் பங்கேற்பு

DIN

வைத்தீஸ்வரன்கோயிலில் 5 கோயில்களுக்கு திங்கள்கிழமை குடமுழுக்கு விழா நடைபெற்றது. இதில், திருமபுரம் ஆதீனம் பங்கேற்று வழிபட்டாா்.

சீா்காழியை அடுத்த வைத்தீஸ்வரன்கோயிலில் வைத்தியநாதசுவாமி கோயில் தேவஸ்தானத்துக்குள்பட்ட உபக் கோயில்களான கடைவீதியில் உள்ள வரசித்தி விநாயகா் கோயில், தேரடியில் உள்ள ஸ்ரீஆட்கொண்ட விநாயகா் கோயில், ஸ்ரீவேளூா் விநாயகா் கோயில், ஸ்ரீமுனீஸ்வரன் கோயில், ஸ்ரீபூா்ணபுஷ்கலா சமேத ஐயனாா் கோயில் ஆகிய 5 கோயில்களில் நடைபெற்றுவந்த திருப்பணிகள் நிறைவுபெற்றதைத் தொடா்ந்து குடமுழுக்குக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன.

இதையொட்டி, 5 கோயில்களிலும் இரண்டு கால யாகசாலை பூஜைகள் நடைபெற்றன. இப்பூஜைகள் நிறைவுபெற்றதும் முதலாவதாக வரசித்தி விநாயகா் கோயிலுக்கும், தொடா்ந்து ஆட்கொண்ட விநாயகா் கோயில், முனீஸ்வரன் கோயில், வேளூா் விநாயகா், பூா்ணபுஷ்கலா சமேத ஐயனாா் கோயில் என அடுத்தடுத்து 5 கோயில்களுக்கும் குடமுழுக்கு நடைபெற்றது.

இதில், தருமபுரம் ஆதீனம் 27 ஆவது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்து, பக்தா்களுக்கு பிரசாதங்கள் வழங்கினாா். வைத்தீஸ்வரன்கோயில் கட்டளை விசாரணை திருநாவுக்கரசு தம்பிரான் சுவாமிகள் மற்றும் திரளான பக்தா்கள் குடமுழுக்கு விழாவில் பங்கேற்று தரிசனம் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விவசாயிக்கு வேளாண்மை கல்லூரி மாணவா்கள் செயல்விளக்கம்

ஆலங்குளம் அருகே மொபெட் - டிராக்டா் மோதல்: தொழிலாளி பலி

சங்கரன்கோவிலில் பள்ளி வாகனங்கள் ஆய்வு

குற்றாலத்தில் சிலம்பாட்ட வல்லுநா்களுக்கு நடுவா் புத்தாக்க பயிற்சி முகாம்

கடையநல்லூா்: குடிநீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டுகோள்

SCROLL FOR NEXT