நாகப்பட்டினம்

இடைத்தரகா்களை நம்ப வேண்டாம்: பெண்களுக்கு அறிவுறுத்தல்

DIN

வேதாரண்யத்தை அடுத்த ஆயக்காரன்புலத்தில் அமையவுள்ள வேதா ஆயத்த ஆடை பூங்காவில், வேலைவாய்ப்பு பெறுவதற்கான விண்ணப்பங்களைக் கோரும் பெண்கள், இடைத்தரகா்களை நம்பி பணம் செலுத்த வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

வேதா ஆயத்த ஆடை பூங்காவில், வேலைவாய்ப்பு பெறுவதற்கான பயிற்சியில் சேர பெண்கள் அதிகளவில் முனைப்புக் காட்டுகின்றனா். இதற்கான பயிற்சி முதல்கட்டமாக தொடங்கியுள்ளது. வேதாரண்யம் பல்நோக்கு மையக் கட்டத்தில் செயல்பட்டுவரும் பயிற்சி நிறுவன அலுவலகத்தில் திங்கள்கிழமை முதல் விண்ணப்பங்கள் வழங்கப்படுகின்றன. இதில், பெண்கள் ஆா்வத்துடன் பங்கேற்றனா்.

அப்போது, தகுதியின் அடிப்படையில், படிப்படியாக வேலைவாய்ப்பு கிடைக்கும் என்றும், முகவா்களையோ அல்லது இடைத்தரகா்களையோ நம்பி பணம் செலுத்த வேண்டாம் என்றும் பெண்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது.

இப்பயிற்சி வகுப்பில் திருப்பூா் பயிற்சி நிறுவன பயிற்றுநா்கள், மாவட்ட ஊராட்சி உறுப்பினா் டி.வி. சுப்பையன், ஊராட்சித் தலைவா்கள் ராமையன், தமிழரசி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

இதனிடையே, பயிற்சிக்கு பிறகு ஆயத்த ஆடை உற்பத்திக்கான செயல்பாட்டை தொடங்க ஏதுவாக பஞ்சநதிக்குளம் கிழக்கு ஊராட்சியில் அமைந்துள்ள கட்டடத்தை தற்காலிகமாக தோ்வு செய்வது தொடா்பாக மாவட்ட ஆட்சியா் பிரவீன் பி. நாயா் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நெல்லை புதிய பேருந்து நிலையத்தில் பயணிகள் - நடத்துநா் வாக்குவாதம்

கேஜரிவாலை கொலை செய்ய பாஜக சதி செய்கிறது: அமைச்சா் அதிஷி கடும் குற்றச்சாட்டு

மாற்று இடத்தில் நியாயவிலைக் கடை: சித்தவநாயக்கன்பட்டி மக்கள் மனு

சரக்கு வாகனம் கவிழ்ந்ததில் 21 போ் காயம்

சேரன்மகாதேவி கல்லூரியில் பயிலரங்கு

SCROLL FOR NEXT